பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 259

பெரு நலம் அருளும், அஃது என் சமயம். எவ்வெண்ணம் என் நெஞ்சினை ஒருப்படுத்தும், அஃது என் ஒருமை என இவ்வண்ணம் நினைந்து ஒழுகுமாறு, இறைநிலையில் அவரவர் எண்ணத்துக்கு முற்றுரிமை வழங்குவது திருவள்ளுவம்.

நற்றாள், மாணடி என வருவது கொண்டு, இறைவனுக்கு உருவம் கூறினார் ஆசிரியர் என்று ஒரு சாரார். கொள்ப. அங்ஙன் கொள்ளின், வாலறிவன், மலர்மிசை ஏகினான் என னகர ஈறாக வருவது கொண்டு. உயர்தினை ஆணுருவமாகக் கூறினார் என்று கொள்ளல் வேண்டும். ஐந்து அவித்தான் என இறந்த காலமாய் வருவது கொண்டு, அவை அவியாதிருந்த காலமும் ஒன்றுண்டு என்றும் கொள்ளப்படும். இவ்வெல்லாம் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (260), தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் (1023), “தாளுளாள் தாமரையினாள் (617), செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் (167) என்பன போல் அமைந்த மரபு நடைகளே யன்றிக் கொள்கை காட்டும் கருத்து நடைகள் அல்ல.

இறைவனுக்கு உருவத்தானும், கரணத்தானும், ஒரு சொற் கிளவியானும் கட்டுக் குறுக்கம் வள்ளுவர் செய்திற்றிலர்; எனினும். இதுகாறும் வளர்ந்து வந்த மக்கள் மனப் பாங்கினை ஆராயுங் காலை, அவரவர் மனம் பிடித்த ஒரு புறப்பற்றுக் கோடு இன்றியமை யாதது என்ற இயல்பு தெளிந்தவர். அகலிருஞாலத்தை அறிவான் கைச்சிறு திணைப்படமும், எடுப்பிக்கும் பெருங் கட்டடத்தைக் காண்பான் கைவரை மனைப்படமும், வாழ்க்கைப் பெரியோரை நினைவான் நிழற்படமும் கொள்கிறோம். கொள்கை காட்டத் தனிக் கொடியும் தனியுடையும் தனிச்சொல் மந்திரமும் அரசியற் கட்சிகளும் மேற்கொள்ளக் காணுதும் அல்லமோ? எனினும், ஒன்று தெளிமின் திணைப்படம் செயற்குரிய உலகம் ஆகாது. வரைப்படம் வாழ்தற்குரிய வீடு ஆகாது. நிழற்படம் இடித்துரைக்கும் பெரியோர் ஆகாது. -

உருவமும் கரணமும் கொடியும் உடையும் மந்திரமும் எல்லாம் நினைவுப் பற்றுக் கோடு அன்றி நினைவுப் பொருளாகா. இவ்வெல்லாம் கேவலம் அறிகுறி மாத்திரைய. நெஞ்சம் பற்றுதற்கு ஒரு குறி வேண்டும் என்ற கல்வியறிவைக் காட்டினும், அக் குறியைக்