பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~260 - - வள்ளுவம்

குறிதான் என வைத்து, ஊடுருவிக் காணும் பகுத்தறிவு இன்றியமை

யாதது என்பது என் துணிபு. உள்ளொளியில்லாக் குறியடிமை

மக்களே எத்துறைக் கண்ணும் சாலப் பலராக உளர்.

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய் - (3.59) பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் ,

மருளானாம் மாணாப் பிறப்பு (351)

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (3.55) பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு - (358)

இனைய மெய்யுணர்வுக்குறள்கள் நம் உள்ளத்தைப் புறவடிமை யினின்றும் விடுதலை செய்யப்பிறந்தன. மனைகட்டியபின் அதன் வரைப்படம் கைவிடப்படுவது போலவும், இந்தியா உரிமை பெற்ற பின்றை விடுதலை மந்திரங்கள் உரை யிழந்தது போலவும், குறிச்சார்பு கெட நம் நெஞ்சத்துக் குணச் சார்பு வளரல் வேண்டும். கண் குறியைக் காணும் போதெல்லாம் மனம் குணத்தை நாடல் வேண்டும்.

முகத்துக் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்துக் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் என்பது திருமூலம்.

SII நண்பர்களே! இறைமை பரப்ப இதுகாறும் எழுந்த நூல்களோ பலப்பல. இது பற்றி வரிந்து முனைந்து உரை பரப்புவாரும் சாலப்பலர். அந்நூல்களைக் கற்பாரும் கேட்பாருமோ அளவிறந்தோர். இங்ஙன் இருந்தும், இறைமை - தூயவாற்றல் - மன்பதைக்கண் பெருகக் காணோம்; மாறாகச் சிறுமையே வெடிக்கக் காண்கின்றோம். குற்றம் யாண்டுளது? என ஆராய்க. திருக்குறள் வழியாக யான் ஆய்ந்த சிலவற்றை நும் முன் பணிந்து உரைப்பல். 1. வினை செய்தால் பற்றொட்டும்; பற்றினால் மீண்டும் பிறப்பு உண்டாகும்; ஆதலின், வினை செய்யற்க என்று மதத்தின் பேரால், இவ்வுலக வாழ்வுக்கு நெய்தற்பறை அறைவாரும் நம்மிடைப் பலர்.