பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 263

பற்றியே - ஆசிரியர் மொழிவாராயினர். இறைவன் உறுப்புடைப் பொருளல்லன்: உறுப்புடையனாவானேல் உலக முதல்வன் ஆகான். இறை சேர்தல் எனினும், இறைவன் அடி சேர்தல் எனினும் கருத்து வேற்றுமையில்லை. பிரிவு பட்ட மாதவி அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் என்று வரைந்தாற் போல, அடி என்னும் சொல் பெரியோரைச் சார்ந்துவரும் பணிவுக் குறிப்புடைய ஒரு தமிழ்க் கிளவி. எனவே அடி சேர்தல் என்ற பகுதிக்கு இறைவனைப் பணிவொடு நினைதல் என்பது பொருள். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்’ என்பர் பரிமேலழகர்.

நினைவு நம் பிறப்பின் தனிச் சிறப்பு ஆதலின். எண்ணத்தால் கண்டுகொண்ட முதல்வனை எண்ணத்தால் பெருக்கிக்கொள்ள வேண்டும். இறைவன் உள்ளப் பற்றினன்: நெஞ்சக் கேண்மையன். நெஞ்சு கலவா வழிபாடெல்லாம் ஆகுல நீர்மையன: ஓராற்றான் ஊரை ஏய்க்கப் பிறந்தன. உள்ளுவார் உள்ளத்தே உறைகின் றானை’ எனவும், நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் எனவும், என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவந்து’ எனவும், இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்’ எனவும் தமிழ் அருட்பெருமக்கள் வலியுறுத்தும் நெஞ்சக் களத்தை நினைக. இறைமை வளர்க்கும் கருவி நினைவல்லது பிறிதில்லை; எனினும், நம் நினைவிற்கு ஒர் ஒழுக்கம் வேண்டும். பண்பிலா நினைவோட்டம் ஒரு கால் மனவாற்றலைப் பெருக்கித்தரினும், மனத் தூய்மையை நல்காது காண். செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு என்றும், காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் வாரானை என்றும், கள்ளமனம் விள்ளும் வகை கருதித் தொழுவீர் என்றும் வரூஉம் தூய தமிழ்த் தொடர்களை உட்கொள்க: கொள்வீராயின், மாசற்ற உள்ளத்தில் பிறக்கும் தூய நினை வோட்டமே பொய்யா இறைமைக் கருவி என்பது உணரப்படும்.

தூய நெஞ்சினால் நினையத்தகும் எண்ணப் பொருள்கள் யாவை? இது பொருள் பொதிந்த வினா. இதற்கு விடையை இறையதிகாரக் குறள்களின் நடையிற் காண்க. வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்ற அடிக்கு. துய எதிர்கால அறிவை நினையா விடின் என்பது கருத்துரை. வேண்டுதல் வேண்டாமை