பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை - 275

கருத்தினைத் தரும் இயல்புக் குறள்களுக்குங்கூட, தங்கொள்கையை ஏற்றி வல்லுரை செய்ய. இப்போலியுரையெல்லாம் வெறியின்றி ஒதுக்கி, ஆசான்தன் எண்ணத்துாய்மை காண வல்ல அறிவுச் செப்பம் கற்பார்க்கு அமைக என்பது என் வாழ்த்துரை. ஒரு காட்டு:

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை அஃதிலார் மேற்கொள் வது (262)

என்பது ஒரு தவக்குறள். “தவக்கோலமும் தவவொழுக்கம் உடைவர்க்கே பொருந்துவதாகும் அக்கோலத்தை அவ்வொழுக் கில்லார் பூணுவது, அவர்தமக்கே யன்றி, மெய்த்தவ வேடத்தர்ர்க் கெல்லாம் பழியாகும்” என்பது பொருள். தவ மறைந்து அல்லவை செய்தல் (264) என்ற இடத்துப் போல் தவமும் என்ற சண்டைக் கிளவிக்குத் தவக்கோலமும் என்பது உரை. இங்ஙன் உரைப் படுத்துவதை விடுத்து, “பயனே யன்றித் தவந்தானும் உண்டாவது முற்றவம் உடையார்க்கே ஆகலான், அத் தவத்தை அம் முற்றவம் இல்லாதார் முயல்வது பயனில் முயற்சியாம்” என்று பரிமேலழகர் பொருள் படுத்துவர். -

முன்னைத் தவம் உண்மையும் இன்மையும் இன்று தவஞ் செய்தாலன்றோ வெளிப்படும் அது கிடக்க, தவஞ் செய்வார் தங்கருமம் செய்வார் (265) என்பது ஆசான் காட்டும் வாழ்வுக்கோள்; ஆதலின், எடுத்த இப்பிறப்பின்கண் தவநோன்பு கொள்ளப் புகுவானை, பயனில் முயற்சி என்று செயல்முனை அறுத்தல் பொருந்துங்கொல்: இவ்வுரை மக்களின் முயற்சியைக் கொல்வது; வள்ளுவர்தம் செயல் நெஞ்சிற்கு முற்றும் முரணியது. தூய்மை, அறிவு, முயற்சி, செயலாகிய வள்ளுவங்கட்கு மாறாக, யார் உரை செய்யினும், யார் விளக்கந் தரினும், அவ்வெல்லாம் வாழப்பிறந்த நாம் ஒருவந்தம் ஒதுக்கற்கு உரியன காண். என்னப் பெரிய உரைக்கும் விளக்கத்துக்கும் விரிவுக்கும் அடிமைப் பட்டு விடாது, விடுதலையில் நின்று கொண்டு, ஆசான்தன் மூலக் குறள்களையே தனித்து வைத்து, ஆய்ந்து அறியும் தூய உரிமை யுணர்வு திருக்குறள் கற்கும் போதெல்லாம் நமக்குப் பிறங்குகதில்.

வள்ளுவர்தம் ஊழ்க் கொள்கை முற்பிறப்புக் குறிப்போ, பழவினைக் குறிப்போ, அவ்வுலகக் குறிப்போதினையளவும் அற்றது