பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 277

ஒருவன் நூற்கல்வி எனை நுண்ணிய பரப்பிற்றாயினும், அஃது அவன் வாழும் சுற்றுப்புறத்தோடு இயையாவிடின், என்னாம்? அச்செயற்கையறிவு கீழ்ப்பட, உண்மையறிவாம் இயற்கையறிவு - அவன்தன் சூழ்நிலையறிவே - அவனுக்கு மிகுந்து தோன்றும் (373). ‘குல விச்சை கல்லாமற் பாகம் பெறும் என்பது பழமொழி. இணைய சில செய்திகளால், ஊழின் பெருவலியை - அறிய வொண்ணாச் சூழ்நிலையின் மறைமுகச் செல்வாக்கை - மக்கட்கு அழுந்த நினைவூட்டுவர்.

உலகம் என்றும் யாண்டும் ஊழ் என்ற நிலை யொன்றுதான் உடையது. அது தன்னியற்கையில் கால் கைகள் போல, ஆகூழ் எனவும், போகூழ் எனவும் இரண்டுபடப் பிரிந்து நிற்பதில்லை காண். ஆகுதல் போகுதல் என்ற அடைகள், உறவுப் பெயர்கள் நிகர்ப்ப மனிதனை நோக்கி எழுந்த இயைபுக் கிளவிகள். ஒருவன் ஆகூழ் - நற்து.ழ் - மக்கள் அனைவர்க்கும் அது வாதல் . அவன்தனக்கே பிறிதொரு கால் ஆகூழ் ஆகாமையும் உண்டு. போகூழும் இத்தன்மைத்து. இங்கு இவன் பெருஞ் செல்வம் அள்ளினான் என்று அங்கு மற்றொருவன் ஈட்டப் புகின், உள்ள கைப் பொருளையும் இழப்பன். எனக்கு வாய்த்தது இவ்விடம் என்று சூதாடிபோல் ஒருவன் அவாவால் மீண்டும் அவ்விடம் செல்வானேல், பேரிழப்பு எய்தக் காண்கின்றோம்; இதனால், அயரா ஊழறிவு - இமையாச் சூழ் ஆராய்ச்சி - நமக்கு ஒடிக் கொண்டிருக்க வேண்டும் என்பது விளங்க வில்லையா?

உலகின் பல பகுதிகளில் தோன்றிய அறிவு வீறுடைய ஆண்மையர் அரசியல், மதவியல், சடங்கியல், சமூகவியல், குடும்பியல் எனவாங்கு, எல்லாக் களத்துக்கண்ணும் வேண்டாப் பழமை களைந்து, வேண்டிய புதுமைப் பயிரிடுப, உயிர்வழங்கியும், உறுப்பிழந்தும், உடைமை துறந்தும் எத்துணையோ பலியாற்றியும் செய்த உலகத் திருத்தங்களே வரலாற்றில் நிரம்பி யுள. முன்னையோர் நினவிலும் காணாச் சீர்திருத்தங்கள், அரசு விதிகளாலும், ஆன்றோர் பலரின் அன்புத் தொண்டினாலும், நாம் கான இந்நாள் நிகழ்ந்துள. மூடக் கொள்கை எனவும். அடிமைச் சடங்கு எனவும், முன்னேற்றத்துக்கு ஆகாப் பழக்க வழக்கம் எனவும்,