பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மை நெஞ்சம் 285

அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த்து அற்று. (78) காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினுTஉங்கு இல்லை உயிர்க்கு (122)

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை (242)

தவஞ்செழ்வார் தங்கருமம் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு (266)

அன்பும் அடக்கமும் அருளும் தவமும் என்றவாறு அதிகாரந்தோறும் எடுத்துக்கொண்ட பொருளைச் சிறப்பித்து மொழிவது திருக்குறள் வழக்கு. இவ்வறமெல்லாம் தலைசான்றன என்பதில் ஐயமில்லை. மக்கட் பெருவாழ்வுக்கு அறம் ஒவ்வொன்றும் வேண்டும் என்ற தெளிவாலும், ஒரறம் பிழைப்பின், பிற அறங்களின் நலமுழுதும் அழிதலுஞ் செய்யும் என்ற அச்சத்தாலும், எல்லா அறத்தையும் இடந்தொறும் தனித்தனி யாப்புறுத்துவா ராயினர்; எனினும், அறப் பன்மை கரையும் வள்ளுவர் செயலொன்று வேண்டும் நெஞ்சினர். எங்ஙன் சொல்லினால் மனம் தொழிற்படும் என்று அங்ஙன் நாடி பிடித்துச் சொல்லும் திறப்பாட்டினர். பத்து வினாக்களுள் நீ விரும் பிய நான்கிற்கு விடை வரைக என்று விழைவுடன் அளிப்பின், எந்நான்கினை எடுப்பது என மாணாக்கன் மலைக்கின்றான். ஒரு வினாவிற்கு விடையெழுதி அரைவழி சென்றபின் கருத்து ஒட்டமின்றி எழுதியதை அடித்து மற்றொரு வினாமேல் அவாவு கின்றான். கருவூலக் கதவைத் திறந்துவிட்டு, நீ வேண்டியாங்கு வாரிக் கொள் என்றால், பேரவாப் பிடித்த ஒரு கொள்ளைக் காரனுக்கும், சிறந்த எப்பொருளை முதலிற் பற்றுவது என மனம் ஊசலாடுமேயன்றி, செயல் உடனே தோன்றாதுகாண்: ஆகலின் அறம் பல நுவலும் வள்ளுவர் திருக்குறள் கற்பவர் மலையாதபடி, உடனடி செயலறம் ஒன்று விதந்து கூட்ட எண்ணினார். வாழ்க்கைக் கூறுபல மொழியும் செயலாசான் நம் நெஞ்சக் களத்துச் சட்டெனப் பதியுமாறு, ஒர் அறவித்து அழுத்த விரும்பினார். கற்கும் யாரொருவர் மனத்தும் துண்ணெணத் தைக்குமாறு, தம்மையே சான்று வைத்து,