பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மை நெஞ்சம் 301

கன்றி விட்டது. நீர்மறை, நெருப்புமறை, பருவமறைப் பொருள்கள் போல, நம் உள்ளம் உணர்ச்சிமறை யாயிற்று. தீக்கொழுந்து படாமுன் செந்தளிர் சுருங்குமாப் போலே, மக்கள் மனம் பொய்க்குமுன் நாணிச் சுருளவில்லை. வழக்கிற் சொல்லுமாங்கு, சூடு சுரணை நமக்குப் பிறக்கவில்லை. அங்ஙன் நெஞ்சு செத்து விட்டது. பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்ற பொய்யில் மொழியையும் நாணிலிகளாகிய நாம் பொய்யாக்கி விட்டோம். உலகமெங்கும் அறம்போலப் பொய் பெருகி நிற்ற லானும், நாமும் பொய்த்துப் பொய்த்துப் பல்கால் பயின்று. விட்டமையானும், வாய்மையின் இன்றியமையாமையைப் புறக்கணித்து விட்டோம்; மறந்தொழிந்தோம். பொய்ப் புற்றுநோயால் ஞாலமும் மக்களும் உள்ளழியும் தீமைக்கு ஒரளவில்லை. எண்ணிக்கைப் பெருக்கத்தால் பொய் அறமாகிவிடாது: உண்மையாகாது. இன்ன உலக நிலையில், நாமெல்லாம் மீண்டும் வாய்மைப் பெருமையை உணரவேண்டியும், சூட்டுணர்ச்சி போற்றல் வேண்டியும், பொய்யா வாழ்க்கை ஒழுகல் வேண்டியும், யாம் மெய்யாக் கண்டவற்றுள் எனைத் தொன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை என்று தற்சான்று-நடையில் நாளறம் யாப்புறுத்தினார் வள்ளுவர் எனத் . **

உடன் பிறந்தீர்! நம் வாழ்க்கைநிலை யாது? நாம் முழுதும் கெட்டவர்களோ எனின், இல்லை; முழு நல்லவர்களோ எனின், அதுவும் இல்லை. அன்பு, அருள், ஈகை, செய்ந்நன்றி யறிவு, அடக்கம், இன்சொல் முதலாய குணங்களும் உடையோம். புறங்கூறல், பயனில சொல்லல், பொய்த்தல், சினத்தல், வெஃகல் முதலாய குற்றங்களும் உடையோம். மக்களுள் ஒருத்தரைக் கூட முழுத்தீயர் என்று காட்ட ஒல்லுங்கொல் நம்புமின் மெய்யாகத் துணிமின் நாம் அனைத்துப் பண்புக் கருவும் பெற்றுளோம். நல்லறத்தின் வித்தெல்லாம் நம் நெஞ்சக்களத்து உள. இச்சால்புகள் நம் வாழ்வில் அடிக்கடி புலனாகின்றன; ஆனால் என்றும் நிலையாகக் காணோம்.

நன்றும் தீதும் இயைந்த கலப்பொழுக்கம் நடத்துகின்றோமே யன்றி, பண்பே சான்ற தனி நல்லொழுக்கம் மேற்கொண்டோம்