பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 O2 வள்ளுவம்

அல்லோம். வேண்டுங்கால் குணமோ குற்றமோ தழுவும் நிலையிலிகள் ஆய்விட்டோமே யன்றி, குணமே பற்றி ஒழுகும் குறிக்கோளிகள் ஆனோமல்லோம். சுருங்கச்சொல்லின், நமக்கு வேண்டுவது ஒழுக்கம்-இடையறா நற்செயல்- என்பது வள்ளுவம்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும் (131) என்ற குறட் குறிப்பு யாது இடையிடையே ஒரொரு கால் கொள்ளும் எனைப் பண்பும், குற்றுயிர் போலக் குற்றொழுக்கு ஆவதன்றி முற்றொழுக்கு ஆகா. வாழ்வுக்கு இடையறவுபடா உயிர்நிலை ஒப்ப, அற்றற்றுப் போகா நீடிய ஒழுக்கநிலை இன்றியமையாதது எனச் சுட்டுவர்.

ஊழ் அதிகாரத்து ஒழுக்கம் பற்றி ஆசிரியர் யாதும் கூறினாரல்லர். புறச் சூழ்நிலை ஆகூழ் ஆகுக! போகூழ் ஆகுக. அவை ஒருவன் புறவாழ்க்கைக்குக் காரணம் ஆவதன்றி, அகப் பண்புக்குப் பற்றாகா. அகம் ஒருவன் தன்னுடைமை. ஒழுக்கம் ஒருவன் தற்பண்பு. உள்ளம் கெடினும், ஒழுக்கம் இழுக்கினும், அவ்விழுக்கக் கேடு அவன் தானே ஆக்கிக் கொண்டது என்பதன்றிப் புறவூழ் அங்ஙன் செய்து விட்டது என்பது ஏமாற்றுரை. செல்வத்துக்கும் ஊழுக்கும் தொடர்பு உண்டு; அறிவுக்கும் ஊழுக்கும் ஒரளவு தொடர்பு உண்டு: ஒழுக்கத்துக்கும் ஊழுக்குமோ எனின், நேரடி இயற்கைத் தொடர்பு இல்லை. அகமுடையான் உரமின்றி அறிவின்றி ஊக்கமின்றி ஊழுக்கு வழிமொழிந்து இடங்கொடுப்பானாயின், அவ்வழி தீயூழ் ஒழுக்கத்தைக் கெடுக்கவற்றாகும். அங்ஙன் கெடுக்க வளைந்து கொடாவாறு, பரிந்து ஒம்பிக் காக்க ஒழுக்கம் (132) என்று தன்னுரிமைக் காப்பு வேண்டுவர்.

இதுகாறும் நாம் ஒழுக்கம் பிழைத்திருந்தோமாயினும் கழிந்த நிலை குறித்து இரங்கிக் கொண்டிருக்க வேண்டா. இதுகாறும் தீய துறைகளில் கன்றிய பழக்கமுடையோம் ஆயினும், அப்பழக்கத்தை விடமுடியாப் பற்றாகக் காமுற வேண்டா.

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று - (6.55)