பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வள்ளுவம்

திருக்குறள் கற்கவேண்டும் என்றற்கு பொருள் செயல்வகை

என்னும் ஓரதிகாரம் போதாதோ? பொருளுக்கு யாவரினும் மிக்க

ஏற்றம் கூறுபவர் இவ்வாசிரியர் என்பதற்கு,

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247)

என்ற ஒரு குறளே கரி. காணாத் துணியைக் கண்ட துணிபால் நிறுவுவது இக்குறள். ஒவ்வோர் உலகத்திற்கும் இன்றியமையாப் பொருள் ஒன்றுண்டு. அப்பொருளின்றேல் அந்த உலகத்து வாழ்வு இன்று. இவ்வுலகத்தை ஆள்வது செல்வப் பொருள். இவ்வுடைமை யில்லார் இவ்வுலக வாழ்க்கை இழந்தார் என்பது ஒருதலை. இது நாம் கண்ட துணிபு. இத்துணிபு காட்டுவதென் அருட் செல்வாக்கு உடைய உலகம் ஒன்றுண்டு. அருளிலதேல் அவ்வுலக நலமில்லை என்பது. இங்ஙன் அருளுக்கு உவமையாகும் தனிப் பேற்றோடு,

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் - செல்வச் செவிலியால் உண்டு (757)

என்றபடி, அவ்வுலகக் குழந்தையை இவ்வுலகத்தே போற்றி வளர்க்கும் செவிலிப் பேறும் பெற்றது பொருள் என்றறிக. எனவே, அருள் வளர்ச்சி வறியார்க்கு ஈயும் பொருட்செலவைப் பொறுத்தது அன்றோ திருக்குறள் பொருளுக்கு அளித்த மதிப்பு இற்றாகும்.

வள்ளுவர் செயல்நெஞ்சத்தினர் என்றேன். அதனைத் திருக் குறளின் தொடக்கமே பறைசாற்றும். ‘அகரமுதல எழுத்தெல்லாம்: என்னும் முதற் குறளால் ஓர் இறையுண்மை சுட்டுகிறார். உண்மை சுட்டியவர் அதனை அடுத்து இறைவன் பண்புகளை விரிப்பார் எனவன்றோ நாம் எதிர்பார்ப்போம். அங்ஙன் அவர் செய்திற்றிலர்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் - (2) என்பது இறையுண்மைக்கு அடுத்த குறள், நூலின் இரண்டாங் குறளாக இதனை வைப்பானேன்? திருக்குறளைக் கற்கத் தொடங் கும்போதே. வாலறிவனைத் தொழுக என்று வழிப்படுத்துவர். தூய அறிவுத் தொழுகையின்றித்தங்குறள் முழுதும் கற்றாலும் அறிவறிந்த மக்கட் பிறப்பிற்குப் பயனின்று என்னும் துணியினராய்,