பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் நெஞ்சம் 29

‘கற்றதனால் ஆய பயன் என்கொல் என வினவி விடுப்பர். இதனால் குறள் கற்பான் விழைவாரை ஒரு நோக்கப் படுத்தும் வள்ளுவர் செயல் நோக்கம் முதற்கண்ணேயே தெளிவாதல் காண்க. மணக்குடவர் முதலாய உரையாசிரியர்கள் குறள் வைப்பு முறையில் தம்முள் பல்வேறுபட்டிருப்பினும், இக்குறளைப் பொறுத்தவரை அகர முதலுக்கு அடுத்த இரண்டாம் வைப்பாகவே கொள்ப. ஆதலால் வைப்பு நிலைமேல் எழுந்த என் கருத்து ஒக்கும் எனத் துணிவல்.

இங்ஙனம் நூலின் முகத்தேயே கற்பாரைச் செயற்படுத்திச் செயலுளத்தோடு அனைத்துப் பகுதிகளையும் எழுதிச் செல்லும் ஆசிரியர், தந்நூல் முழுதும் கற்ற பின்னும் ஒழுக்கம் கைவரப் பெறாதானை இகழ்வாராகி, பொருட்பால் இறுதிக்கண் கயமை’ என்று ஒரதிகாரமே வைத்தமைந்தார். வேறென் செயவல்லார்? ‘கயமை என்னும் இழிதலைப்புத் தாங்கி ஒரு பத்துப் பாட்டு திருக்குறளில் உளவாமேல், என் நினைக்கின்றீர்? அவ்விருப்பு வள்ளுவர் நெஞ்சக் கொதிப்பின் வெளியீடு காண்மின் மக்களே போல்வர் கயவர் (1071), தேவர் அனையர் கயவர் (1073), ‘அறையறை யன்னர் கயவர் (1076), ‘ஈர்ங்கை விதிரார் கயவர்: (1077) என வரூஉம் கயமைத் தலைப்புக் குறள்களை இந்நாள் எழுத்தாளரும் சொல்லாளரும் நகைச்சுவைக்குப் பயன்கொள்ப, சொல்வார் சிரித்து விளக்குப; கேட்பார் வெடிசிரிப்பு மிக்குக் கைதட்டுப. பிறந்த தமிழகத்தேயே குறள் ஆட்சிப்படும் முறைக்கேடு இது. நம்மனோரை முன்னிலைப்படுத்திச் சொல்ல நாணிக் கண்ணோடி நாகரிகமாகப் படர்க்கைமாட்டு வைத்து, நம் சுயநிலை வெளிப்படுத்துகிறார் என்னும் உட்கோள், சொல்வார் கேட்பார் நெஞ்சுகளைத் தைக்குமேல், நகை பிறக்குமா? சுவை யூறுமா? கைதட்டுமா? தீயவொரு மகன் திருந்த வேண்டும் என்று இடித்துரைக்குங் காலை, அவன் சிரித்தாலும் அவன் பக்கத்தார் சிரித்தாலும் என்னாவோம் ஆறாச் சினம் உறுவோம் அல்லது இன்ன மடவனைத் திருத்த முன் வந்தோமே என்று நம்முள் வருத்தமும் நாணமும் கொள்வோம். இவ்வுணர்ச்சியோடு நினைக.

வள்ளுவத் தோன்றல் நம்முன் அமர்ந்து இக்குறள்களை விரிப்பதாகக் கருதுமின். “அன்பு ஊறி மனங்கசிந்து மக்கள் நலமே