பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வள்ளுவம்

தடிப்புற்று நீழிே இருத்தலானும், பிறகுடி, பிறசாதி, பிறசமயம், பிறமொழி எனவாங்கு வேற்றுமைப்பட்டாருள்ளும் வாழ்வனைய பெருங்கேண்மை சால நீடித்திருத்தலானும், நாம் பகுத்தறியத் தகும் வள்ளுவர் நுனித்துக்கண்ட வள்ளுவம் என்னை “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” (34) என்பது. அப்பெருமகன் காட்டும் நெறி நாம் அறையும் புறப்பொதுமையன்று; தனி நெஞ்சத் துய்மை. சான்ற பொதுமைப்பட்டிருந்தும், மனமாசுடையவர் யாவர் கண்ணும் இகலுவர்: முரணுவர்; பகைப்பர். மனமாசற்றார் எவ்வகை வேற்றுமைக் கண்ணும் உறவு கொள்வர்; உதவுவர்; கலப்பர். இதுவே முடிந்த பேரடிப்படை உண்மை. ஆதலின் திருக்குறளுக்குச் சாதிசமய முதலாய பொதுமை நிலைக்களமன்று. மக்கள் மனம் நிலைக்களம். ஆளுக்கொரு மனம் உடையராதலின், அப்பன்மை நிலைக்களம். மனத்து விரிந்து பரந்த, நல்ல தீய எண்ணங்கள் நிலைக்களம். சாதி சமய நாடுகளிடைப் பொதுமை நாட்டல் திருக்குறள் நோக்கமன்று. மேற்கூறியாங்குப் பொதுமைக்குள் பகையும் வேற்றுமைக்குள் நட்பும் கண்ட மனவறிஞர் வள்ளுவ ராதலின், தனித்தனியோரின் வஞ்சனை போக்கி நெஞ்சத்துய்மை செய்வதே வள்ளுவம் என்று தெளிக. தன் நெஞ்சறிவது பொய்யற்க (293), நெஞ்சில் துறவார் துறந்தார்போல் (276), மனத்தது மாசாக மாண்டார் நீராடி (278), ‘வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் (271), நெஞ்சத்து அகநக நட்பு (786) எனப் பலவிடத்தும் நெஞ்சு சுட்டிப் பேசும் திருக்குறள் நெறியை நாம் நினையவேண்டும்.

உடலறிஞனாகிய மருத்துவன் யாது செய்கின்றான்? மக்கள் உடலையும், உடலொன்றின் பல்வேறு அகப்புறக் கூறுகளையும் நிலைக்களமாகக் கொள்கிறான். உடம்பின் நல்ல தீய வளர்ச்சிகளை, நோயாளி தோறும் நுணுகி ஆய்கிறான். அவ்வளர்ச்சிகளுக்கு அவரவர் உணவுகளையும் செயல்களையும் சூழ்நிலைகளையும் வினவி அறிகிறான். பசியையும் உறக்கத்தையும் செரிமானத்தையும், தனித்தனி ஆளின் உடற்கூறுக்கேற்ப, பட்ட நோய்க்கேற்ப, உணவு மாற்றமோ, சூழ்நிலைமாற்றமோ, பிற மருந்தோ விதிக்கிறான். உடல் நலம் தருகிறான். யார்க்கும் மருத்துவம் செய்யும் இவ்வுடலறிஞனை, சாதி சமய மொழி நாட்டுப்