பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநிலையறம் 49

என்றபடி வழிப்பொதுமை பேசாது, நெஞ்சத்தொருமை, மூலத் தூய்மை சுட்டுவதே வள்ளுவமாம். ஆதலின் தனிமறை யென்றோ, வாழ்வுமறை யென்றோ, செயல்மறை யென்றோ, தூயமறை யென்றோ, என்மறை யென்றோ, திருக்குறளுக்குப் பெயர் பொருத் துக. ஆகுல நீர பிற என வள்ளுவர் தள்ளியதனை அறமாகப் பறைசாற்றாது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் (34) என அவர் துணிந்ததனை உளங் கொள்க.

அன்பர்களே! பலநிலையறம் என்ற தலைப்பிட்டு இந் நெடும்பொழுது விளக்கிய ஒருயிர்க் கருத்தாவது: திருக்குறட்கு மக்கள் நெஞ்சமே நிலைக்களம். அந்நிலைக்களத் தூய்மை செய்வதே வள்ளுவம். நம் ஒவ்வொருத்தர் நெஞ்சமும் பல்வேறு எண்ண நிலைகளைக் கொண்டது; ஆதலின் தூய்மை நோக்கிய ஆசிரியர், நம் எண்ண நிலைப் பன்மைக்கேற்ப, அதனிற்பிறந்த வாழ்வு நிலைப்பன்மைக் கேற்ப, அறப்பன்மை வகுத்துக் காட்டினார். நிலைபல உட்கொண்டு ஒரு நிலைக்கு ஒரறமாகப் பலவறம் வகுத்த செயல் நுட்பம் திருவள்ளுவர் கண்ணேதான் காணக் கிடப்பது. திருக்குறளைக் கற்றபின், அதற்குத்தக நிற்க முனையும் நாம் கசடற்ற இம்முறையில் அவ்வாழ்வு நூலைக் கற்க வேண்டும்.

அதிகாரத் தலைப்புக்கள் அளவில் பல நிலையறம் யாங்ஙனம் தோன்றுகிறது என முன்னர் உரைத்தேன்; இனி வருஞ் சொற் பொழிவுகளிலும் உரை செய்வேனாதலின், ஈண்டுக் குறள்களிடை வைத்து ஓரளவு காண்பாம். நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் (124), அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை (469), தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு (470), நிலையின் இழிந்தக் கடை (964) என வரூஉங் குறள்களால், ஆசான் கண்டுகொண்ட நிலைப்பன்மை தெளியத் தகும். செல்வ வாழ்வும் செல்வத் தாழ்வும் கேடும் பெருக்கமும் இல்லல்ல. (1.15) என்றபடி உலகியல்பாகும். மக்கள் புதுச் செல்வக்காலை ஏக்கழுத்தம் உடையவராய் விம்மி நடப்பர். வறுமைக்காலை குற்றம் செய்தாற் போல் கூசிப் புறஞ்செல்வர். புறவாழ்வுக்கு ஒப்ப, மன வாழ்வையும். ஏற்ற விறக்கஞ் செய்து கொள்வர். “மாந்தர்தம் உள்ளத்து அணையது

. - . 2