பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவம்

உயர்வு (59.5) என்று எண்ணாது செல்வத்து அனையது உயர்வு என மயங்குவர். இஃது அறிவுடைமை யன்று காண். ஒருபொழுதும் வாழ்வது அறியா நாம் கோடி பல கருதும் கற்பனைக் கண்ணை இயல்பில் உடையோம். இன்னாமை இன்பம் எனக் கொளின் (630) என்றபடி, ஒன்றனை ஒன்றாக மாறி நுகரும் அறிவுக் கற்பனை வல்லோம். இழந்ததை. இல்லாததை நிறைமனஞ் செய்துகொள்ளும் அகவன்மை மக்கட்கு உண்டு. இவ்வன்மையை வேண்டுழி வேண்டுழி விரிவித்துக் கொள்ளும் மக்களே வாழ்வு நுட்பம் அறிந்தோராவர்.

புறவளன் பெருகிய காலத்துக் குணநலம் பெருகினாற்போல் உணர்ச்சியால் துள்ளித் திரியும் மனவெழுச்சியைக் கற்பனை வன்மையால் மட்டுப்படுத்த வேண்டும். புறவளன் சுருங்கிய காலத்து இலைபோல் உடன் சுருங்கும் மனமுடக்கத்தை, அவ்வன்மையால் காத்து நீட்ட வேண்டும்.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய -

சுருக்கத்து வேண்டும் உயர்வு (963)

என்பது புறநிலைக் கேற்பக் கொளத்தகும் அகநிலையறம். புறவகச் சமனிலை செய்துகொள்க என்பது இக்குறட் கருத்து. செல்வக் காப்போ உயிர்க்காப்போ நம் வாழ்வின் குறிக்கோளன்று. செல்வ வரவும் செலவும் பெரும்பாலும் ஊழ் எனப்படும் உலகத் தியற்கையைப் பொறுத்தது. உயிர் நிற்பு நம் முயற்சிக்கு உட்பட்ட தன்று. அஃது என்றோ ஒரு நாள் நீங்கும் நில்லா இயல்பிற்று. ஆதலின் நாம் உயிர் வாழுங் காறும் நம் உளத்தைத் தூய்தாக, பட்ட மாசு நீங்க, புதுமாசுபடியாமல் போற்றிக் கொள்வதே நம் கோளாகும்: நம்மனைவோர் முயற்சிக்கு உட்பட்ட இன்றியமையா நோக்கமாகும். மனத்துாய்மையே உயிரினும் காத்தோம்பத் தகும் ஒழுக்கமாகும். செல்வநிலை செருக்குத் தந்து எளிதில் பல் மனமாசு விளைவிக்கும் என்ற கருத்தானன்றே, பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து (12.5) என நிலையறம் விதந்தோதுவர். ‘ஆற்றுவார் ஆற்றல் பணிதல் (985) என்பதுTஉம் செல்வம், பதவி முதலிய புறப்பெருக்க நிலையார்க்குக் கிளக்கப்படுவது என அறிக. உள்ளம் போற்றாமல், முயற்சி வழிபற்றாமல், உயிர் மெய்காப்பான்