பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வ்ப் பேரன்பர்களே!

வணக்கம். இம்மாலைச் சொற்பொழிவு பொருள் நிலை என்னும் செல்வத் தலைப்பின் மேற்று. இன்று. நாளை, நாளை நீக்கி என்ற முந்நாட்களிலும் பொருள் பற்றிய பலநிலைச் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து நீவிர் செவி மடுப்பீர். வள்ளுவர் நெஞ்சத் தலைப்பில், திருக்குறள் நாள் வாழ்க்கைக்கு ஒப்பிய செயல்நூல் என்பதை எண்பிப்பான், நனி சிறிது பொருள்பற்றிக் குறிப்பிட்டேன். பல நிலையறத் தலைப்பில், மக்கள்பால் ஆசிரியர் கண்ட பல்வேறு பொருள் நிலைகளைத் தவச் சிறிது தொகுத் துரைத்தேன். செயல் நெஞ்சினராம் வள்ளுவர் நம்மை உடைமைக் காலத்தும் இன்மைக் காலத்தும் பொருளுலகில் யாங்ஙனம் செயற்படுத்துகிறார் என்பதனை, இது முதலாம் முத்தலைப்பிலும் ஆராய்வோம். இவ்வாராய்ச்சியைக் குறிக்கொண்டு கேட்டார் யார்க்கும் குறளைக் கற்குமுறையும், கற்றுப் பயன்கொள்ளும் செயல் வேட்கையும் விளங்கித் தோன்றும் என்பது என் துணிபு. தன் பொருள்நிலை எது? அந்நிலைக்கேற்ற குறள் நெறி எது? என்பது உம் முன்னர்த் தோன்றக் காண்பீர்கள். கைக்கப் பேசினும், கழறியுரைப்பினும், மயங்குவது போலினும், முரணுவது போலினும், யான் அறிந்தவாறு சொல்லாற்றும் உங்கள் அன்பனைப் பொறுத்துச் சாய்த்த செவியினராய் உளங்கொண்மின்!

பொருளை ஆராய்வதற்குமுன் வேறொரு விளக்கம்: நென்னல் மாலைச் சொற்பொழிவைப் பற்றியது. அப்பொழிவால் எழுந்த இரண்டோர் ஐயங்களை, அன்பர் சிலர் என் இல்லம் தேடிவந்து வினவினர். “அவரவர் நிலையோடு ஒட்டித் திருக்குறளைப் பொறுக்கிக் கற்க வேண்டும் என்று அழுத்தி மொழிந்தீர்; அதுவே கருத்தாயின் கற்றோர், கற்றில னாயினும் கேட்க என்னும் குறளைப் படியாது விட்டுவிட வேண்டுமா? பொருளற்றவன், ஈத்துவக்கும்