பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வள்ளுவம்

தமிழ் நூல் அனைத்தும் பொருள் பற்றி வலியுறுத்தும் ஒருமுகக் கோட்பாடுகள் ஈதலும் துய்த்தலும் என்ற இரண்டு. “ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்’ என்பது குறுந்தொகை. ‘ கொடுப்பது உம் துய்ப்பது உம் இல்லார்க்கு என்பது திருக்குறள். ! வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான்! என்பது பழமொழி. கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை உள்ளத்தான் என்பது நாலடி. கொடையை முன்னும் துய்த்தலைப் பின்னும் பெரும்பாலும் நிரல்பட மொழிவதால், தமிழ் நூலோரின் கருத்து செல்வத்துத் தலைப்பயன் ஈதல் என்பதாம். இதனால் உடையான் துய்ப்பதைக் கீழ்மைப்படுத்தினர் என்றோ புறக்கணித்தனர் என்றோ மயங்கற்க ஈதல் கடமை; துய்த்தல் உரிமை என்பது அன்னோர் தெளிந்த முடிபு. பயன் இரண்டனுள் நினைவூட்டத்தகுவது கொடைக் கடனே யன்றோ! தன்னுரிமை பேணும் வேட்கை காமம் போல் யார்க்கும் இயல்பில் உண்டு. நிலத்திடைப் புல்போல் உரிமையுணர்ச்சி மனத்திடை யாங்ஙனமோ தோன்றிவிடுகின்றது. அதனால் துய்க்கும் உரிமை பற்றி நூலோர் விரித்து உரைப்பதில்லை. குழிதோண்டி நீர் விட்டுக் காத்துவளர்க்கும் மரக்கன்று போல்வது கடமையுணர்வு. அறிவூட்டி நினைவூட்டி அதனை மக்கள்பால் வளர்க்கவேண்டும். ஆதலின் கொடைக்கடன் பற்றியே பன்மாணும் சான்றோர் விரிக்கலாயினர்.

உரிமை வெறியும் கடமைக்கழிப்பும் இன்று பெருகிவரும் ஆகா உணர்ச்சிகள் அல்லவா? இந்திய உரிமை பெற்றுவாழும் நாம் ஆகாப் பல எழுச்சிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம். அவை ஆகும் உணர்ச்சிகளாக மேலும் மயங்கி அறிகின்றோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாம் சுமந்த அடிமை, அரசு நிலையில் மட்டுமன்று: கல்வி, அறிவு, காதல் முதலாய அனைத்து நிலையிலும் பரந்த அடிமைப்பட்டோம். எழுபிறப்புக்கு வேண்டிய தீவினைப் பெருக்கத்தை எடுத்த ஒரு பிறப்பிலேயே ஈட்டிக்கொள்வான் பேதை (835) என்று வள்ளுவர் நகுவதற்கு ஒப்பப் பல அடிமைப்பான்மை களை ஒரடிமையால் ஈட்டிக் கொண்டு மடம் பட்டோம். ஆட்சியுரிமை பெற்ற இன்றும் நம் அடிமை பல துறைகளினின்றும் மீண்டபாடில்லை. “என்று தணியும் இவ்வடிமையின் மோகம்” என்ற