பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட் பயனிலை 81

உரிமைப் புலவன் பழிச்சொல் இன்னும் மறையவில்லை. ஏன்? அணித்தாரைப் பேணுங்கடமையை மறந்தோம். இன்றும் நன்கு மறந்து வருகின்றோம். உறவினர் நலத்தை, ஊரார் நலத்தை மறப்பது மிகநல்லது என்று கூட நினைக்கின்றோம். மேலும் சுற்றங்கெடுத்துப் பக்கங்கெடுத்து. ஊர்கெடுத்துப் பரந்த நோக்கம் என்ற காலப் போர்வை பூண்டு உலகநலம் பேணுவது போலத் துடிக்கின்றோம்.

கடமையில் உண்டு உரிமைக்காவல் என்ற தூய அறிவு நமக்கு இன்னும் தோன்றவில்லைகாண். வேருக்கு நீரூற்றிப் பழங் கொள்ளும் எளிய வழியை விடுத்து, நாம் கொள்வது பழந்தானே என்று மரமேறிப் பிஞ்சுக்கு நேரடியாக நீரூற்றினோம்; புல்லறிவு உடையவர்களானோம். கண்ட பயனென்? கூரைபோல் மாளிகையும் தளைப்பட்டது. ஏழையொடு பெருஞ்செல்வரும் அடிமைப்பட்டனர். உரிமைபெற்ற நாம் அவரவர் சுற்றுப்புறம் வாழுங் கடமையைப் பெரிதாக நினைக்கவேண்டும். கடமையை மறந்தோமாயின், மீண்டும் வருவது அடிமை காணிர். பிறநலம் பேணும் கடமையும் அதற்காகத் தன்னலம் பேணிக் கொள்ளும் உரிமையும் அறத் தொடுபட்ட பொருட் பயன்கள் என்பதுவே தமிழ்த்துணிபு. ஈன்று புறந்தருதல் என்தலைக் கடன் என்றபடி மகச்செல்வம் தருவது பெண்பேறு ஆயினாற்போல, பொருட்செல்வம் ஈட்டுவது உலகத்து ஆடவர் மேற்றாய் வருதலின், ஈதற்கடனை ஆண்கடன்’ என்ப. ‘ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய’ எனப் புற நானுாறும், ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண் கடன்’ என நாலடியும் கொடைக்கடனை ஆண்கடனெனவே ஆட்சி செய்யும். ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் நிலக்குப் பொறை (1003) என்ற குறட்பகுதியும் சான்றாதல் காண்க.

நுனிப்புல் மேய்வார்க்குத் திருக்குறள் பல முரண் உடைய தாகவே தோன்றும். மக்களின் வாழ்க்கைப் பல்நிலைகளில் ஒருபால் உட்கொண்டு, வள்ளுவர் நெஞ்சு காணும் திறலுடையார்க்கு. அம்முரனெல்லாம் உடலுறுப்பு வேற்றுமைபோல் உலகநிலை வேற்றுமையென விளங்கி யொழியும். தெளிவு சான்ற வாழ்க்கைச் செயல் நூல் திருக்குறள் என்பது என்துணிபு. உலகிடை நிலவும் J.6