பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வள்ளுவம்

காத்து ஒன்று அழியார் ஒன்றழிய ஒன்று காவார் வள்ளுவர். என்பதற்குச் சான்று பிற வேண்டா. இங்ஙன் தெளிந்த பகுத்தறிவினர்; ஆதலின், அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி (226), பாத்துண் மரீஇயவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது (227) என்ற குறள்களால் உரிமை வேண்டுவான் கடமை செய்க என்று வரைந்தனர். நிரப்பிய தாமே தமியர் உணல் இன்னாது எனப் பழித்தனர். கடமை முற்றும் மறந்த உரிமை முழு மக்களைச் சாதல் இனிது என இழித்தனர்.

முதலில் ஆய்ந்த முழுக்கடமை யுணர்ச்சி பின்பற்றுதற்கு எட்டா அரிய சிறப்பு உடையது. இதுவரை ஆய்ந்த முற்றுரிமை யுணர்ச்சியோ பின்பற்றுவதற்கு ஆகா இழிதரத்தது. கடமையே நினையும் நீத்தாரையும் உரிமையே பற்றும் கயவரையும் உள்ளவாறு கண்ட வள்ளுவர் இரண்டும் கெட்ட - துய்த்தலும் கொடுத்தலும் அற்ற - பேதையரையும் உலகிடைக் கண்டார். நன்றியில் செல்வம் என்னும் அதிகாரம் இப்பேதையர் நிலைகண்டு பிறந்தது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று எண்ணிய பேதை, உடையார்க்கு எல்லாம் உளவாம் என்று கனவுகிறான். நீரால் விளைவு உண்டாமோ? நூல் நிலையத்தால் அறிவுண்டாமோ? உண்டாம் என்று சொல்லும் உலகோரின் கருத்து என்னை? விளைவு வேண்டின், நீரினை வயலுக்குப் பாய்ச்ச வேண்டும். அறிவு வேண்டின், நிலைய நூலைக் கற்க வேண்டும். செலுத்தா நீர்த்தேக்கத்தால், கல்லா நூற்றொகுதியால் எப்பொருளும் தன் இருப்பளவால் பயன் ஊட்டாது. -

“எல்லாம் பொருளால் ஆம்’ என்பதன் உள்ளுறை அதனைப் பயன்படுத்துவதால் ஆகும் என்பதன்றோ! இப்பொருட்கு இவன் உடையான் என்பதற்குக் கேவலம் பொருளிருப்புச் சான்றாகாது. இருப்பளவு சான்றாகுமேல். அஞ்சற்காரன் செல்வன் எனப்படு வான். வங்கிகளிலும் அரசுக் கருவூலங்களிலும் பணம் வாங்கும் கணக்கர்கள் கோடி செல்வர் எனப்படுவர். ஆதலின் பொருளிருப்பு வெறும் பொய்க்காட்சி; பொய்யுடைமை என்க. பொய்யா உடைமை என்பது பயனுடைமை. பயன் கொள்பவனே உடையோன் எனத்தகுவன். பயனே உடைமைக்கு வலுவாவது கொடுப்பது உம்