பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட் பயனிலை 95

அல்லது கொண்டு வந்த பழத்துள் இரண்டொன்று அளிக்கின்றோம். உழைப்பின் உரிமைப் பயன்பெற்ற அச்சிறுவன் மனம் தீய நினைவின்றி அமைதி கொள்ளும். உரிமைப் பேற்றுக்குப் பின்னும் களவாட அவாவுவனேல், கழறற்கும் ஒறுத்தற்கும் வன்மையுண்டு; நடுவுண்டு. அவ்விடிப்புக்கு அவன் உள்ளமும் நாணி நிற்கும். உரிமைகொடா நிலையில் களவு செய்வானை ஒறுப்பினும் அவ்வொறுப்புக்கு உள்ளம் தாக்கித் திருத்தும் ஆற்றல் இல்லை.

இன்ன பிழையில் நெஞ்சப் பாங்கினை - மக்கள் இயல்பை நுணுகி அறிந்தவர் வள்ளுவர். காய், பழம், நிழல் எனப் பல பயன்கள் வித்தின் வளர்ச்சியுள் அடங்கிக் கிடக்குமாப்போல. அருள், அன்பு, ஒப்புரவு, ஈகை என்ற பிறநலன்கள் உரிமை வளர்ச்சியுள் அடங்கிக்கிடப்பன என்று கண்டு கொண்டார். மக்கட்குத் தன்னல வுரிமை கொடுத்தே, துய்க்கும் உரிமை வழங்கியே, பிறநலக் கடமையும் ஈகையறமும் வலியுறுத்த வேண்டும் என்று தெளிந்தார். கையிருப்பு விதை உணவும் விளைத்து மேலைக்கு வித்துக்களும் தரவல்லது என உழவன் அறிவான் ஆதலால், வித்து அழித்து உண்ணான், முதலிலார்க்கு ஊதியம் இல்லை (449) என்றபடி, முதல் வைத்தே ஊதியம் ஈட்ட வேண்டும். அவ்வூதியம் கொண்டே கொடுத்தலும் துய்த்தலும் பேணவேண்டும். இஃதோர் வரன்முறை. “அனைத்தும் ஈக என்னின், முதல் அழியும். பின்னர் ஊதியம் எங்கே கொடுப்பும் துய்ப்பும்தாம் எங்கே? அவை செய்யும் மகன் வாழ்வுதான் எங்கே செய்வான் அழியப் பயன்கள் அழிய, ஊதியம் அழிய, முதல் அழிக்கும் அறங்கரைவது ஒட்டாது என்ற துணிபால்,

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி - (4.77) எனக் காரியகாரண நடையிற் கூறினார். அளவறிந்த ஈகையே முதற்பொருளைக் காத்து ஊதியத்தைப் பின்னும் பின்னும் வழங்குதற்கு உரிய நெறியாகும் என்பது அறிவொக்கும் காரணம் அன்றோ ஊதியம் வழங்கற்கு உரியது; முதற் பொருள் போற்றற்கு உரியது என்ற கருத்து பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை’ (252) என்ற அடியான் பெறப்படும். அவையத் தமிழ் வள்ளல்கள் வழங்கிய பெருங்கொடை தமிழகம் அறிந்தது. நாடிந்தார்;