பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア3 வாழையும் வள்ளுவமும் தனித்தனி முக்கனி பிழிந்து' என்ற வள்ளல் பெருமான் வாக்கில் காணும் வாழை, மா, பலா என்னும் முக்கனி மரங்களைக் கூர்ந்து நோக்கினால் அவற்றில் வாழையை நீக்கி ஏனை இரண்டும் இவ்வொழுங்குகளில் சரியாக அமையா திருப்பதைக் காணலாம். இவற்றில் பட்டைகளோ, கிளைகளே, இலைகளோ காய்களோ எவையும் இவ்ஒழுங்கில் எழுவ தில்லை. அடுத்து மாவின் பழம் மட்டிலும் செம்மையாய் அமைந்து உண்பதற்கும் இனிமையாய் உள்ளது. பலாச் சுளைகள் உண்பதற்கு இனிமையாக இருப்பினும், பலாப் பழங்கள் நல்ல அமைப்பில் இருப்பதில்லை. சிலவற்றில் ஒரு பகுதி ஒடுங்கியும் ஒரு பகுதி சிறுத்தும் ஒரு பகுதி பெருத்தும் காணப்படுவதுண்டு. பழங்கள் முள்ளோடு பிசினும் உடை யவை சுளைகளை எடுத்து உண்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். வாழையின் காய்களிலோ பழங்களிலோ இத்தகைய முடக்குகளை, இடர்களைக் காண்டதரிது. முக்கனி மரங்களில் பலாவை விட மாவும் மாவை விட வாழையும் சிறந்தன. வேறு மா வகைகளிலும் செடி வகைகளிலும் இல் ஒழுங்கு முறைகளில் சிற்சில ஏறக்குறை யவாவது காணப் பெற்றாலும் வாழையின் ஒழுங்குமுறை அத்தனையும் நிறைவாகக் காண்பது அரிது! அங்ங்னமே, பொதுவாக மக்கள் வாழும் இடங்களில் இல்லங்களில் சென்று பார்த்தால், அவர்கள் பேரறிஞர்களாக இருப்பினும்கூட, அவர்கள் தெருக்கள். இல்ல வரிசைகள், இல்லத்தில் புழங்கும் பொருள்கள். நூல்கள் முதலியன பெரும்பாலும் ஒழுங்கு முறையில் இருப்பதில்லை. அறவொழுங்கு அவர்களிடையே வீறுபெறுவதில்லை. சான்றோர் சிலரிடமே அரிதில் அதனைக் காணமுடிகின்றது. வ. வா. சி - 7