பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 ஈத்துவக்கும் இன்பம் தம்மிடம் உள்ளவற்றைப் பிறர்க்குக் கொடுப்பதை ஒரு விளையாட்டாகக் கொண்டு மகிழ்வர்கள். தம்மிடம் உள்ள பொரி, பொட்டுக் கடலை போன்றவற்றைக் காக்கைகட்கு எறிந்து தந்து மகிழ்வதைக் காண்கின்றோம் அல்லவா? என் நல்லுழின் காரணமாகப் பத்தாண்டுகள் (1950-60 காரைக் குடியில் வள்ளல் அழகப்பர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற் றும் பேறு பெற்றேன். அப்போது ஈத்துவக்கும் இன்பத்தை அவ்வள்ளல் முகத்தில் தோன்றியதைக் கண்டு மகிழ்ந்ததுண்டு. தம்மிடம் பொருள் இல்லாத போது கூட அதற்கும் இதற்கும் என பல இலட்சம் வெண்பொற் காசுகளைத் தருவதாக அறிவிப்பு செய்து மகிழ்வார், விரைவில் அதனைச் சம்பாதித்து ஈவதை உலகமே அறியும். தாம் குடியிருந்த இல்லத்தையே மகளிர்க் கல்லூரிக்கு மகிழ்ந்து ஈந்ததை என் கண்ணாரக் கண்டேன். என்னிடம் கூட அந்த இரக்கப் பண்பு தொற்றிக் கொண்டிருப்பதை அடிக்கடி உணர்கின்றேன். இரக்கம் அற்ற செல்வர்க்கு இத்தகைய இன்பம் ஒன்று இருப்பது தெரிவதில்லை. அவர்கள் தமது செல்வத்தை ஈயாமல் வைத்திருந்து பிறகு வருந்தும்போது கூட இந்த இன்பத்தை நினைப்பது இல்லை. இக்கருத்தை, ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்திழக்கும் வன்க ணவர். (228)" என்று புரிய வைத்துள்ளதைக் காண்கின்றோம். இந்த இன்பம் அறிவில்லாதவனிடம் இருத்தல் முடியாது. அவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தல் அருமை. ஒருவேளை அங்ங்ணம் மகிழ்ந்து கொடுப்பானே 8. மேலது - 8