பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 78 யானால் அது வேறொன்றும் இல்லை. பொருளைப் பெறுகின்றவனின் நல்வினை என்றே கொள்ள வேண்டும். அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம் (842)” என்பது பொய்யா மொழி யான் பழகின பன்மொழிப்புலவர் வே. வேங்கடராஜூலு ரெட்டியாரும் வைணவ சீலர் பு: ரா. புருஷோத்தம நாயுடு அவர்களும் என்னிடம் இக்குறளை அடிக்கடிக் கூறும் பழக்கத்தை நினைவு கூர்கின்றேன். சாவது போன்ற துன்பம் வேறு ஒன்று இல்லை என்பதை எல்லோரும் அறிவர். கற்றவர் கல்லாதவர் ஏன் நடைபாதையில் உறங்கும் ஏழையர் கூட நன்கு அறிவர். வாழ்க்கை வெல்லம் போன்று இனியது. ஆனால் வறியவர்க்கு உதவாதபோது சாவதே இனியதாகி விடும். இக்கருத்தின் சாதலின் இன்னாதது இல்லை இனிததுஉம் ஈதல் இயையாக் கடை (230)” என்ற குறள் மணியில் காணலாம். இந்த ஒளியை அறவோர் மட்டிலுமே அறிவர் அஃது அவர்தம் இயல்பே யாகும். 9. புல்லறவான்மை - 2 i0, ஈகை - 10