பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 80 போத்தல்களில் வரும் பாகு போன்ற சர்ப்பத்தை நீர் விட்டு, இளக்கி எல்லோரும் இன்பமாகப் பருகும் பானம் போலாக்கிப் பருகுவதுபோல், நாமும் இதில் சொற்களைப் பெய்து இளக்கிப் படித்து அநுபவிப்போம். அருவப் பொருள் காலம் என்பது ஓர் அருவப் பொருள். கண்ணுக்குப்புலனாகாததும் ஏனைய புலன் களாலும் உணர முடியாததும் ஐம்பூதங்களில் ஒன்றாகிய ஆகாயம் போல் கண்ணுக்குப் புலனாகாததுமான ஒரு திரவியம். இதனை எந்த வித அளவுகருவிகளாலும் கூறுபடுத்த முடியாது. இன்றைய அறிவியலறிஞர்கள் பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வரும் காலத்தை 380 நாள்கள் 6 மணி 9 நிமிடம், 954 விநாடி என்று குறிப்பிடுகின்றனர். இதனையே நாம் ஆண்டு என்கின்றோம். பூமியும் தன் அச்சில் ஒரு தடவை சுழன்று வரும் காலத்தை 25 மணி 56 நிமிடம் 41 விநாடி என்று குறிப்பிடுகின்றனர். இதனையே நாம் நாள் என வழங்கு கின்றோம். பூமியைச் சந்திரன் ஒரு முறை சுற்றி வரும் காலத்தை 29 நாட்கள் 44 நிமிடம் 28 விநாடிகள் எனக் குறிப்பிடுகின்றனர். இதனை நாம் மாதம் என்கிறோம். மேலும் நாளை வைகறை, விடியல், நண்பகல், மாலை யாமம், எற்பாடு என்று ஆறு கூறிட்டுச் சிறு பொழுது என்றும், இங்ங்னமே ஆண்டை கார் ஆவணி புரட்டாசி, கூதிர் ஐப்பசி, கார்த்திகை) முன்பனி மார்கழி.தை பனி பின மாசி, பங்குனி இளவேனில் (சித்திரை, வைகாசி முதுவேனில் ஆனி, ஆடி என்று ஆறு கூறிட்டுப் பெரும்பொழுது என்றும் வழங்குவர். இன்னும் பகல் இரவு என்ற காலத்தை 60 நாழிகை என்று கணக்கிடுவர். மணிப்பொறி 1. நீர், நெருப்பு. காற்று ஆகிய நான்கும். ஏதோ ஒரு புலனால் அறியப் பெனுபவை;உணரப்பெறுபவை.