பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 அறிவியல் நோக்கு கண்டறிந்த பின்னர் நிமிடம் விநாடி என்ற கீழ்க்கணக்குகளும் எழுந்தன. இதுவரையிலும் அறிவியலுக்கு உட்பட்ட கணக்குகள் இந்தக் கணக்கில் பொருளை நேராக எண்ண லளவை, முகத்தலளவை முதலியவற்றால் அளப்பது போன்று காலம் நேராக ஓர் அளவு கருவியால் அளக்கப் பெறவில்லை என்பது கருத்தில் இருத்தத்தக்கது. இதற்குமேல் மெய்ப்பொருள் அறிஞர்கள் குறிப்பிடும் கணக்கையும் காண்போம். இவர்கள் கால தத்துவத்தைச் சாற்றுவதையும் தெரிந்து கொள்வோம். நிமிடம் பதினைந்து கொண்டது காஷ்டை காஷ்டை முபபது கொண்டது கலை கலை முப்பது கொண்டது முகூர்த்தம் முகூர்த்தம் முப்பது கொண்டது நாள் நாள் முப்பது கொண்டது மாதம் மாதம் இரண்டு கொண்டது இருது இருது மூன்று கொண்டது அயனம், அயனம் இரண்டு கொண்டது ஆண்டு. "பிரார்த்தம்". இப்படி மனித ஆண்டு 360 கொண்டது ஒரு தேவயாண்டு தேவயாண்டு 12,000 கொண்டது ஒரு சதுர்யுகம், 71 சதுர்யுகம் கொண்டது ஒரு மந்வந்தரம், 14 மந்வந்தரம் கொண்டது 100 சதுர்யுகம். இது நான்முகனுக்கு ஒரு பகல் 2000 சதுர்யுகம் நான்முகனுக்கு ஒருநாள். இந்த நாட்களால் மாதம் வருடங்களைப் பெருக்கி அந்த வருடங்கள் 100 ஆனால் நான்முகன் ஆயுள் முடியும். இதற்குப் பரம் என்று பெயர். இங்ங்னம் பல்வேறு வடிவினவாகத் தோன்றக் கடவதாய், ஆதி அந்தம் அற்றதாய், இறைவனுடைய உலகப் படைப்பு அளிப்பு அழிப்பு ஆகிய அலகிலா விளையாட்டுக் கருவியாய் இறைவனுடைய சரீரமாக அமைந்து சரீர - சரீரபாவனை இருப்பது கால தத்துவம். இவ்வாறு