பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 38 உடனே ஒரு புதிய ஒளி என் உள்ளத்தில் எழுந்தது. அவ்வொளியால் அடியிற்காணும் கம்பராமாயணப் பாடல் ஒன்றுக்கு விளக்கம் தென்பட்டது. ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீபோய்த் தாழ்இருஞ் சடைகள் தாங்கித் தாங்கருந் தவமேற் கொண்டு பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணிய நதிகள் ஆடி ஏழ்இரண்டு ஆண்டின் வாஎன்று ஏவினன் அரசன் என்றான்" இதில், தாழ் இருஞ்சடைகள் தாங்கி என்பதன் பொருள் தெளிவாகத் துலங்கியது. சடைமுடியுடன் கைகேயியின் சேடியர் தந்த மரஉரியைத் தரித்துக் கொண்டு தெருவில் செல்லுதலை , துன்னெடுஞ் சீரையும் சுற்றி மீண்டும் அப் பொன்னெடுஞ் தெருவிடைப் போதல் மேயினான் ’ என்ற பாடல் அடிகள் காட்டுகின்றன. இவற்றை நோக்கும்போது இரவோடு இரவாக இராமன் தலையில் சடைகள் வளர்க்கப் பலர் துணைபுரிந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது. நீட்டல் என்பதற்குக் குன்றக்குடியில் போர்த்துறைக் குட்டித்தம்பிரான் காட்டிய ஒளியால் இப்போது விளக்கம் தெளிவாயிற்று. 3. கம்பர், அயோத், கைகேயிசூழ்வினை-101. 3.மேலது மேலது நகர் நீங்கு -188.