பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 90 வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்ட விடுதல் அரிது (109) எனவும் வருபவற்றை ஈண்டுச் சிந்திக்கலாம். வள்ளுவர் நூலின் அறத்துப் பாலில் முதல் அதிகாரம் தனிமுதற் பொருளாகிய கடவுளைப் பற்றிய தென்றால், அதன் இறுதி அதிகாரம் தனி நிலைத் திறனாகிய ஊழைப் பற்றியது படைப்பில் ஒரு முறையான ஆட்சி இருந்து வருகின்றது. மண்ணிலும் விண்ணிலும் நிகழும் மாறுதல்கள் நெடுங்காலமாகவே ஒருவகை ஒழுங்குக்கு உட்ப்ட்டு நடந்து வருகின்றன. ஞாயிறும் திங்களும் விண்மீன்களும் கோள் களும் ஒழுங்காக இயக்கியும் இயங்கியும் வருகின்றன. காற்றும் மழையும் தட்பமும் வெப்பமும் மற்றவைகளும் ஒழுங்கு பெறவே அமைந்து வருகின்றன. ஓரறிவுயிர்கள் முதல் ஆறறிவுள்ள மக்கள் வரையில் பலவகை உயிர்களும் உடம்பெடுத்துப் பிறப்பது முதல் இறப்பது வரையில் எல்லாம் ஒருவகை ஒழுங்கு முறைக்கு உட்பட்டே நடந்து வருகின்றன. இந்த ஒழுங்கான ஆட்சி முறையை ஊழை ஆராய்ந்து அறிவது அருமை. ஆனால் உண்டு என்று உணர்வது எளிது. வள்ளுவர் பெருமான் இந்த அதிகாரத்தில் மக்கள் வாழ்க்கை யில் அதற்கு உள்ள ஆற்றல் தோன்ற விளக்கிக் கூறுகின்றார். தன்மை பெறுவதற்குக் காரணமாக ஊழ் செயற்படும்போது அது ஆகூழ், ஆகலுழ், நல்வினை என்று வழங்கப்பெறும். ஒருவர் நன்மை இழப்பதற்குக் காரணமாக ஊழ் அமையும் போது அது போகூழ், இழஆழ், தீவினை என்று கூறப்பெறும். கைப்பொருள் மிகுதற்குக் காரணமான ஊழால் முயற்சி உண்டாகும். கைப்பொருள் அழிவதற்குக் காரணமான ஊழால் சோம்பல் தோன்றும்.