பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ { ஊழ் ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி (371) என்பது வள்ளுவர் வாக்கு. பொருள் இழப்பதற்குக் காரணமான ஊழ் அறிவைக் கெடுத்துப்பேதையாக்கும் பொருள் சேர்வதற்குக் காரணமான ஊழ் அறிவை விரிவாகும். பேதை படுக்கும் இழஆழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை (3.72) என்பது பொய்யாமொழி, ஊழால் இயங்காத உயிர் ஒன்று கூட இல்லை. இறைபதிவு பெற்ற ஊழாதலால் முடிவில் அது. எல்லா உயிர்க்கும் செம்மை கூட்டுவதாகவே இருக்கும். எல்லாம் நன்மைக்கே என்னும் பழமொழி இக்கருத்தால் எழுந்ததாகக் கருதலாம். தீயூழால் தொடக்குற்று இடர்ப்படுகின்றவர் அது நன்மைக்கே என்னும் முடிவில் அமைதியாய் அதனை நுகர்ந்து கழித்தல் வேண்டும். நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவது எவன் (379) என்பதன் கருத்து இதுவேயாகும். ஒருவர் பொருள் திரட்டும் நோக்கத்தோடு நுட்பமான நூல் பல கற்றாலும் அவனுக்கு ஊழால் உள்ளதாகிய அறிவே முன்னிற்கும். நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் (373) என்பது வள்ளுவம். இக்கற்றறிவால் ஊழை மாற்றிவிட முடியாது. இறைவலிமை சேர்ந்த செயலாதலால் மற்றவல்லமை