பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 92

களால் ஈழை எதிர்க்க இயலாது. இறைவலிமை கொண்டுதான் :இவலியை ஓரளவாவது குறைத்துக் கொள்ள இயலும், உலகத்தில ஊழால் ஏற்பட்டுள்ள அமைப்பு இருவகையாக உள்ளது. செல்வம் பெறுவதற்குரிய அமைப்பு வேறு அறிவுடையவராக விலங்குவதற்கு வேண்டிய அமைப்பு வேது இதனை. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு (374) என்ற பொய்யாமொழி விளக்கி நிற்கும். ஆதலின் செல்வம் சேர்ப்பதற்கு அறிவின் துணை போதாது. செல்வம் சேர்ப்பதற் கென்று முயற்சி எடுத்தால் ஊழ் காரணமாக நல்ல முயற்சிகள் எல்லாம் தீமையாய் முடிதலும் உண்டு. தீபமுயற்சிகள் யாவும் நன்மையாக முடிதலும் உண்டு. நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் தல்லவனம் செல்வம் செயற்கு (375) என்பது இக்கருத்தை விளக்கும் வள்ளுவம். ஊழால் உரிமை யல்லாத பொருள்கள் எவ்வளவு வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும். ஊழால் தமக்கு உரிய பொருள்கள் எங்காவது கொண்டு போய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகாமல் நிற்கும். பரியினும் ஆகாவாம் பால்அல்ல ; உய்த்துச் சொரியினும் போகா தாம் (376) என்பது இக்கருத்திற்கு ஒளி காட்டும் அற்புத வள்ளுவம். ஒன்றை நாம் கருத்தில் இருத்துதல் வேண்டும். இங்கு செல்வம் சேர்ப்பதற்கு ஊழின் துணை இருந்தாலன்றி முடியாது