பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 ஊழ் என்றும், ஊழின் துணை இல்லையானால் உள்ள அறிவும் செல்வம் சேர்க்கப் பயன்படாது என்றும் கூறினாரேயன்றி அறிவு வளர்ச்சிக்கு ஊழ்வேண்டும் என்று இயம்பவில்லை. செல்வம் சேர்த்தல் நுகர்தல் முதலிய வற்றில் ஊழ்தலையிடுவது போல் அறிவு ஒழுக்கம், அடக்கம், அவாவின்மை முதலிய நற்பண்புகளைப் பெறுவதில் ஊழ் தலையிடுவதில்லை. செல்வம் சேர்த்தல், நுகர்தல் முதலியவை புற வாழ்க்கைப் பகுதிகள் அறிவு, அடக்கம், ஒழுக்கம் முதலியவை அகவாழ்க்கைப் பகுதிகள், புறவாழ்க்கைப் பகுதியில் ஊழின் துணையிருந்தாலன்றி நினைத்தவாறு பெற முடியாது. அகவாழ்க்கைப் பகுதியில் ஊழ் அவரவர்க்கு உரிமை கொடுத் துள்ளது. அகவாழ்க்கையில் வேண்டிய வேண்டியாங்கு எய்தலாம். வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்(265) என்ற குறள் மணியின் ஒளியில் இக்கருத்தைக் கண்டு மகிழலாம். இந்த உலகில் இதுகாறும் அறிவுடையவராக விரும்பி முயன்றவர் அறிவு பெறாமல் இருந்தது இல்லை. அடக்கம் உடையவராக வாழ முயன்றவர் அதைப் பெறாததும் இல்லை. ஒழுக்கம் போற்றி வாழ முயன்றவர் விரும்பிய வாறு அதைப் பெறத் தவறியதும் இல்லை அவா அறுக்க வேண்டும் என்று உண்மையாக முயன்றவர் முயற்சியின் பயனைப் பெறாததும் இல்லை. இவ்வாறே மற்ற நற்பண்புகளை விரும்பிப் பாடுபட்ட வர்கள் அவற்றை யடைந்து முன்னேறியுள்ளனர். ஆனால் செல்வம் பெற வேண்டும் என்று விரும்பிப் பாடுபட்டவர்கள்