பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 ஊழ் பொதுவாழ்க்கைக்கு இடையூறே ஆகின்றது. அது போன்றதே புறவாழ்க்கைத் துறை. ஆகையால் எல்லோருக்கும் பொதுவாக ஆட்சிபுரியும் ஊழ் அங்கு யாவர்க்கும் உரிமை இல்லாமல் வைத்திருப்பதும் பொருந்தும், இறைவனது படைப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்று ஆராய்ந்தாலும் இதுபோல் உரிமை உள்ள பகுதியும் உரிமை இல்லாப் பகுதியும் ஒவ்வொன்றில் இருத்தல் காணலாம். மக்கள் உடம்பை எடுத்து ஆராய்ந்தாலும் இதைக் காணலாம். உடம்புக்கு மிக மிக இன்றியமையாத உறுப்புகளாகவும் மிக விரைவில் கெடக்கூடியவையாகவும் கெட்டால் உயிர்வாழ்க்கை அழிவு செய்யக் கூடியவைகளாகவும் உள்ள இதயம், நுரை பீரல், கல்லீரல், மூளை முதலியவற்றை மக்கள் பொறுப்பில் விடாமல் அவர்களுக்கு எட்டாநிலையில் படைப்பு அமைந் துள்ளது. கை, கால் முதலியவற்றை மட்டுமே மக்கள் பொறுப் பில் காக்கவும் உரிமை கொடுத்து அமைந்துள்ளது. ஊழின் ஆட்சி முறையும் இத்தகையதே. இதை உணர்ந்தால் மக்கள் அறிவு ஒழுக்கமே முதலியவற்றைத் தேடி ஓயாமல் உழைக்க வேண்டும் என்பதும் செல்வத்தையும் நுகர்வையும் தேடி அளவு கடந்து அலையாமல் கடமையை மட்டும் செய்து அமைய வேண்டும் என்பதும் தெளிவாகும். வள்ளுவர் 1. இவை உள்ளுறுப்புகள் ஆகும். உடலுக்குள்ளே இருப்பவை. இவை முற்றிலும் தசைகளாலானவை. ஆங்கிலத்தில் Organs என்று பெயர். எலும்பே இவற்றில் இல்லை. இவையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும். ஒன்று கெட்டாலும் ஏனையவற்றின் இயக்கத்தில் கோளாறுகள் நிகழும். இயக்கத்தையே கெட்டழிக்கும். 2. இவை எலும்புகள் அடங்கிய பகுதிகள். ஆங்கிலத்தில் Limbs என்று பெயர். கைபோனாலும் கால் இயங்கும். கால் போனாலும் கை இயங்கும். உயிருக்கு ஆபத்து இல்லை.