பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 ஊழ் செல்வம் சேர்ப்பதற்கும் நுகர்தல் இல்லாமல் இருப்பதற்கும் ஊழ்வினை காரணமாக இருப்பதால் அவர்கள் அவ்வாறு துறக்க முடிவதில்லை. ஊழால் வரவேண்டிய துன்பங்களை இவ்வாறு தாக்காமல் நீங்குமானால் அவர்கள் துறப்பார்கள். ஆனால் ஊழ் ஆட்சி விடாது. துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால ஊட்ட கழியும் எனின் (378) என்பது பொய்யா மொழி. ஊழால் இன்ப துன்பங்களும் அமைகின்றன. புறவாழ்வில் செல்வம், நுகர்வு, முதலியவற்றை அமைப்பது போலவே, அகவாழ்வில் பிறருக்கு நன்மை செய்தோர் நன்மை அடையுமாறும், தீமை செய்தோர் தீமைகளடையு மாறும் ஊழே அமைகின்றது. அறத்தினுஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலி னுங்கில்லை கேடு (32) என்பது வள்ளுவம் அகவாழ்வில் அறத்தைப் போற்றி வளர்க்க உரிமை கொடுத்த ஊழ் அதற்கேற்ப நன்மை தீமை விளையும் முறை பிறழாமல் ஆட்சி புரிந்து வருகிறது. அதாவது அறநெறி போற்றி வாழ்ந்தால் நன்மை விளையுமாறும் அறநெறி புறக் கணித்து வாழ்ந்தால் தீமை விளையுமாறும் அமைந்துள்ளது. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (204) பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் (319) என்ற குறள் மணிகளை நோக்க இவை புலனாகும். அறத்தைப் போற்றவும் புறக்கணிக்கவும் மக்களுக்கு உரிமை உள்ளதே