பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 102 எண்களையே சொல்லி வினவுகின்றனர். இங்கெல்லாம் பெயர்களை விட எண்களே முதலிடம் பெறுகின்றன என்பதை அறிகின்றோம். வங்கிகளிலும் பெயர்களைவிட எண்களையே கூறுமாறு கேட்கின்றனர். என் ஆசிரியப் பெருந்தகை அருள் தந்தை ஜெரோம் டிசெளசா 1936-39 பல ஆண்டுகள் கழித்துப் afégh Gurg Are you not subbu with number 306 பி.எஸ்சி வகுப்பில் எண் இது என்று கூறியதை வியப்புடன் நினைவு கூர்கின்றேன். ஆகவே எல்லாவற்றிலும் பெயர்களை விட எண்களே சிறப்பிடம் பெறுவதைக் காண முடிகின்றது. எண்ணின் சிறப்பு: ஈண்டு ஒன்று முதல் தொடங்கி வரும் எண்கள் சிறப்பிடம் பெறுவதை நோக்குவோம். ஒன்று : 'கடவுள் ஒருவர் "ஒன்றே என்னின் ஒன்றேயாம் என்பது கம்பன் வாக்கு இரண்டு :துவைதம். இது வைணவ தத்துவங்களில் ஒன்று. துவைதம் இரண்டு. இரட்டை மணி மாலை நூலின் பெயர் மூன்று மும்மூர்த்திகள் - நான்முகன் சிவன் திருமால். மும்மலங்கள் - ஆணவம், கன்பம், மாயை. பதி, பசு, பாசம் சைவதத்துவம். சித்து, அசித்து, ஈசுவரன் வைணவதத்துவம், முத்தி நிலைகள் - சாலோகம், சாமீப்யம், சாரூபம்.இறைவன் நிலைகள் - அருவம், உருவம் அருவுருவம் (சைவம் மூவகைக் காரணங்கள் முதற் காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம், திருமந்திரம், துவையம், சரமசுலோகம் வைணவம். மும்மணிக் கோவை நூலின் பெயர். நான்கு: நால்வர் - சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர். நான்மறை - இருக்கு. யசுர், சாமம் அதர் வணம். நால்வகை நெறிகள் - அன்பு நெறி, மகன்மை நெறி,