பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 எண்ணும் எழுத்தும் மருட்கை, அச்சம். பெருமிதம், வெகுளி, உவகை என்பன. எண்பேராயம் (கரணத்தியலவர், கருமாதிகாரர். கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர். இவுளி மாந்தர் என்பவர்கள். எண்சுவடி ஒன்பது: ஒன்பது வாசல் உடலிலுள்ள ஒன்பது துவாரங்கள். ஒன்பது கோள்கள் நவக்கிரகங்கள்) - ஞாயிறு, திங்கள். செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, இராகு கேது என்பவை. நவரசங்கள் - சிருங்காரம், கருணம், வீரம், ரெளத்திரம் பயானகம், பீபத்சம், அற்புதம், சாந்தம் ஆகியவை. நவவிதசம்பந்தம் தந்தை தனயன் இரட்சிப் பவன் இரட்சிக்கப் படுபவன், அடிமை அடிமை கொள்பவன், நாயகன் நாயகி, சொத்து - சொத்துக் குரியவன், அறிபவன் - அறியப்படுபவன், சரீரம் சரீரத்தை உடையவன், தாங்குகிறவன்-தாங்கப்படும் பொருள், அநுபவிக்கிறவன் அநுபவிக்கும் பொருள் என்ற உறவுகள். நவமணிகள் இரத்தினங்கள் கோமே தகம். நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து. வைரம், வைடூரியம் என்பன. நவமணிமாலை - வெண்பா ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்ற ஐந்து வகைப் பாக்களும் தாழிசை, துறை, விருத்தம் என்ற மூவினப்பவினங் களும் ஒன்பது பாட்டுகள் பொருந்திய வகையினையுடையது பத்து: பதிகம் - பத்துப் பாடல்களைக் கொண்டது. பதிற்றுப் பத்து நூல், பத்துப்பாட்டு, தசகம் - பத்துப் பதிகங்களையுடைய ஒரு பகுதி திருவாய் மொழி, திருமொழி போன்றவை) பதினொன்று: ஏகாதச உருத்திரர்கள், ஏகாதசி (பதினொன்றாம் திதி) பன்னிரண்டு: பன்னிரு ஆழ்வார்கள். பன்னிரு திருமுறைகள் பன்னிரண்டு லக்னம் இராசி மண்டலம்)