பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 எண்ணும் எழுத்தும் கன்மேந்திரியங்கள் 5; தந்மாத்திரைகள் 5 பிரிதிவி. அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என பூதங்கள் 5 பிரகிருதி, மகாந், ஆங்காரம் என 3 ஆக மிச்ர தத்துவம் 24: ஆன்மா ஒன்று. பரமான் மா ஒன்று ஆக வைணவ தத்துவம் 25, முப்பத்தாறு: உலகம் 36 தத்துவங்களாலானது சைவம் ஆன்மதத்துவம் 24 வித்யாதத்துவம் சிவதத்துவம் 5 ஆக இவை 36. நாற்பத்தெட்டு: கோயில் சமய சடங்குகளில் மேற் கொள்ளப் பெறும் மண்டலக் கணக்கில் பயன்படும் எண் 48. ஐம்பது: பொன் விழா ஆண்டு. ஆண்டு விழா கொண் டாடப் பெறும். அறுபது: மணிவிழா ஆண்டு - ஆண்டுவிழா கொண் டாடப் பெறும். அறுபத்து மூன்று: நாயன்மார்களின் தொகை. பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு. அறுபத்து நான்கு: சிவபெருமானின் திருவிளை யாடல்களின் தொகை, பரஞ்சோதி திருவிளையாடல் புராணம் இலக்கியம்) எழுபது: முத்து விழா ஆண்டு ஆண்டு விழா கொண்டாடப்பெறும் எழுபத்தைந்து: பவளவிழா ஆண்டு ஆண்டுவிழா கொண்டாடப்பெறும். எண்பது: சதாபிஷேகம் என வழங்கப் பெறும் பெருமங்கலப் பெருவிழா ஆண்டு-ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பெறும். தொண்ணுற்றாறு : தத்துவங்கள் 36; தாத்து விகங்கள் 60 ஆக சைவ தத்துவங்கள் 96.