பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. செவியுணவு 'கல்வி' என்ற அதிகாரத்தில் (40 கல்வியின் இன்றியமையாமையை வற்புறுத்திய வள்ளுவர் கேள்வி என்ற அடுத்த அதிகாரத்தில் (41) கல்லாமையால் நேரிடும் இழிநிலைகளைக் காட்டி எதிர்மறையால் கல்வியை வற்புறுத்துவர். அடுத்து வருவது கேள்வி 42 என்ற அதிகாரம் கற்பதற்கு வாய்ப்பில்லாதவர்கள் கற்றறிந்தவர் கூறுவதைக் கேட்டலாலும் கல்வியின் பயனை எய்தலாம் என்பதை விளக்குவது. இதில், செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிதளவு வயிற்றுக்கும் ஈயப் படும் (412) என்ற குறள் வருகின்றது. இதில் கேள்விச் செல்வத்தை ஆசிரியர் வற்புறுத்துவதைப் பரிமேலழகர் ஆசிரியர் கூறுவதன் உயிர் நாடியை நன்கு உணர்ந்து அற்புதமாக விளக்குவர். அவ்விளக்கத்தை ஈண்டுக் காண்போம். உரையாசியர் கூறும் சிறப்புரை: "சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வியுள்ள பொழுது உணவு வெறுக்கப்பெறுதலான் இல்லாத போழ்து என்றும், உணவு பெரியதாய வழி தேடல் துன்பமேயன்றி, நோயும் காமமும் மிகுதலால் சிறிது என்றும், அது உணவு தானும் பின்னிருந்து கேட்டற் பொருட்டாகலான் ஈயப்படும் என்றும் கூறினார். ஈதல்' வயிற்றது இழிவு தோன்ற நின்றது.