பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 செவியுணவு பதி பசு பாசம் என்ற சைவ சித்தாந்த தத்துவம் பற்றியோ, சித்து அசித்து, ஈசுவன் என்ற வைணவ சித்தாந்த (விசிட்டாத்வைத தத்துவம்பற்றியோ அவ்வவ் தத்துவ அறிஞர்களின் விரிவுரைகள் நடைபெறுகின்றன. சமய உணர்வு மிக்கோர் இந்த விரிவுரையில் ஈடுபட்டு உள்ளத்தைப் பறி கொடுத்துத் தம்மை மறந்த நிலையில் கேட்டு அநுபவிக் கின்றனர். இவர்கட்கும் பசிமறந்த நிலை ஏற்படுகின்றது. இது பிற்பயத்தல் என்ற குறிக்கோள் நிலையில் உள்ளோர் நிலை. (2) சாதாரணமாகப் பசிக்காக உணவு உண்ணப் படுகின்றது. சிலர் அறுசுவை உண்டியை நுகர விழைகின்றனர். பல்வேறு இனிப்பு வகைகள், பல்வேறு சுவை நீர் வகைகள் முதலியவற்றில் இவர்கள் மனம் பாய்கின்றது. இவற்றால் உணவுவகை பெரிதாகின்றது. பெரிதாய வழியாக' அமைகின்றது. அ) இதற்குப் பொருட் செலவு அதிகமாகும்; இதற்குப் பொருள் தேட வேண்டும். அலுவல் நேரம் போக, மேலும் சில மணி நேரம் வேறு பணிகளில் ஈடுபட்டு உழைக்க வேண்டும். இதனால் உழைப்புத் துன்பம் ஏற்படுகிறது. சிலர் குறுக்கு வழியாக கையூட்டு போன்ற முறைகளையும் கையாள நேரிடுகின்றது. இது காவலர் கவனத்திற்கு வந்து பிடிபட நேர்ந்தால் வழக்கு நடைபெறல், அதனால் தண்டனை அநு பவிக்க நேரிடல் போன்ற துன்பங்களைச் சந்திக்க நேரிடும். இவை அதிமாகப் பொருள்தேடலால் ஏற்படும் துன்பங்கள் ஆகும். (ஆ) இவ்வாறு தேடப்பெற்ற பொருளைக் கொண்டு பேருண்டி கொள்வார்களேயானால் - அஃதாவது மாறுபாடுள்ள உணவை உண்பார்களேயானால் உடலுக்கு ஊறுபாடு ஏற்படும் "மிகினும் குறையினும் நோய் செயும்.