பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 112 துவரப்பசிக்காமல் உண்ணும் சந்தர்ப்பங்களும் நேரிடும். இவற்றால் ஏற்படும் நோய் இருவகைப்படும். () செரிமானம் ஆகாமை ஒன்று. இதனால் ஏற்படும் விளைவுகள் வாந்தி, பேதி, வாந்தியால் வரும் துன்பத்தையும் பேதியால் கழிச்சலால் நேரிடும் தொல்லைகளையும் நாம் நன்கு அறிவோம். (ii) செரிமானம் ஆகி சத்து உடலுக்கு ஏறினால் காமம் என்ற நோய் தலை தூக்கும். இந்திரிய சேட்டைகள் நேரிடும். ஒரே மங்கையுடன் முறையுடன் அதிகமாகச் சிற்றின்பம் நுகரின் இருவரும் நரம்புத் தளர்ச்சி நோயால் தாக்குற நேரும். பல மங்கையருடன் அளவு மீறி சிற்றின்பம் நுகரின் புகழ் கெடும் பால்வழி நோய்களால் தொல்லைப் பட நேரும். (ii) சிறிது அளவோடு என்ற கருத்தில் பொருள் கொள்ள வேண்டும். அடிக்கடி அவி உணவிற் கொப்பதாய செவி உணவை விழைந்து அதில் நாட்டம் கொள்ளும் பொழுது அதற்குத் தடையாகப் பசி நோக்கக்கூடாது என்பதற்காகவே அளவோடு உணவு கொள்ளவேண்டும். (iv) ஈதல் ஈயப்படும் என்பதிலுள்ள செயல் இது. ஈதல் வயிற்றது இழிவு தோன்ற நின்றது. உயர்ந்த குறிக்கோளுடைய மனம் செவியுணவை நுகரும்பொழுது வயற்றில் பசி வருவது பிச்சை கேட்பது போல உள்ளதாகக் கருதுகின்றார். அதனால் ஈயப்படும் என்றார். நன்னூலி லுள்ள, ஈதா கொடுவெனும் மூன்றும் முறையே இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை 2. நன்னூல் சொல் பொதுவியல் நூற் 56.