பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 பெரியளின் துணை அச்சாந்திகளால் காத்தல் ஆகும். மக்களால் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம் குறிப்பால் நிகழ்தல் ஆகாரம் குறிப்பின்றி நிகழ்வன செயல் என்பவற்றால் அறிந்து தக்க உபாயங்களால் காத்தல். ஒருவர் எல்லாவற்றையும் தாமே கண்டு ஆராய முடியாது. ஆராய்ந்து கூறவல்ல அநுபவம் மிக்க பெரியவர் களை நாடி அவர்களின் ஆராய்ச்சியைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். ஆகையால் அவர்கள் அவருக்குக் கண் போன்றவர்கள். அவ்வாறு தக்க பெரியோர்களிடத்தில் கலந்து ஒழுகவல்ல தலைவனுக்கு ஒரு தீங்கும் வராது. அவருடைய பகைவர்களும் அவருக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் (445) தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல் (446) என்பது வள்ளுவர்பெருமானின் வாய்மொழிகள். அறிவால் ஆராய்ந்து கூறவல்ல பெரியார்கள் பல வகைப் படுவர். சிலர் தலைவன்மேல் கொண்ட அன்பினால் நன்மை யை மட்டுமே கண்டு கூறவல்லவர்கள். ஆகையால் அவர் தம் ஆராய்ச்சி முறைஉடையது அன்று. ஆகையால் பயன் தராது. சிலர் தலைவனிடம் உள்ள அச்சத்தால் அவனிடம் தீமையைக் கண்டதும் எடுத்துக் கூற துணிவற்றவர்களாக இருப்பர் அவர் களால் தலைவன்திருந்த முடியாது. அதனால் அவர்களுடைய துணை இருந்தும் பயன் இராது. இன்னும் சிலர், தலைவனிடம் நன்மை இருந்தாலும் அதனை மறைத்துத் தீமையை மட்டுமே