பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பணியாளர் தேர்வு தாம் மக்களாட்சியின் கீழ் உள்ளோம். வாக்குரிமை உள்ள நமக்கு அரசின் நடைமுறையினையும் ஓரளவு அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. அரசன் மக்களாட்சியில் முதல் அமைச்சன் எல்லாக் கடமைகளையும் தானே செய்ய முடியாது. ஆகையால் பலரைத் தனக்குத் துணையாக நியமித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நியமிப்பதற்கு முன் அவர்கள் தக்கவர்களா அல்லரா என்று ஆராய்ந்து அறிய வேண்டும். இதுவே தெரிந்து தெளிதல் அதி. 51 என்பது. புதியனவராக நியமிக்கப்பட்டவருக்கு வழங்கப்பெறும் ஈராண்டு அல்லது மூவாண்டு காலத்தைத் தகுதி ஆய்வுக் south (Probational period) ording ago&akšić) ošāg &g. வள்ளுவர் இவ்வதிகாரத்தின் அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கும் திறந்தெரிந்து தேறப் படும் (50.1) என்ற முதற் குறட்பாவிலேயே நான்கு முறைகளைக் குறிப்பிடுகின்றார். உரையாசிரியர் பரிமேலழகர் வடநூல் ஒன்றாகிய சுக்கிர நீதியை அடிப்படையாகக் கொண்டு இம்முறைகளை உபதைகள் என்று குறிப்பிட்டு விளக்குவார். அறஉபதை புதியவராக நியமிக்கப் பெற்றவர் அறத்தில் நம்பிக்கையுடையவரா? அதில் உறுதி உடையவரா?