121 பணியாளர் தேர்வு என்பதை ஆராய வேண்டும். சுக்கிர நீதியில் உள்ள குறிப்பு புரோகிதரையும் அறவோரையும் அனுப்பி இவ்வரசன் முதல் அமைச்சன் அறம் வழுவியவன் இவனை நீக்கி அறனும் உரிமையும் உடையவன் ஒருவனை வைத்தற்கு எண்ணினம். இதுவேயாவர்க்கும் இயைந்தது. நும் கருத்து என்ன என்று சபதத்துடன் சொல்லுவித்தல்: பொருளுபதை: சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் அனுப்பி இவ்வரசன் முதலமைச்சன் உலோபத் தன்மையுடையவன் கஞ்சப் பிரபு. இவனைப் போக்கி கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற் கெண்ணினம். இதுதான் யாவர்க்கும் இயைந்தது. நும் கருத்து என்ன என்று சபதத் துடன் சொல்லுவித்தல்: இன்ப உபதை: தொன்று தொட்டு இவன் மனைவி யுடன் நன்கு தொடர்பு கொண்டு பழகிய சந்நியாசினியை தவமுது மகள் விட்டு அவளால் அமைச்சன் மனைவியருள் (உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு காதலுற்றுக் கூட்டுவிக்க என்னை விடுத்தாள். அவளைக் கூடுவையாயின் நினக்குப் பேரின்பமேயன்றிப் பெரும்பொருளும் கைகூடும் எனச் சொல்லுவித்தல்' 1. முதலமைச்சனே தந்திரமாக இவ்வாறு செய்யத் துண்டுதல் . இக்காலத்தில் மாநிலக்காவல் நிலைய விசாரணை அமைப்பும் மத்திய காவல் நிலைய விசாரணை அமைப்பும் உள்ளன. 1.இது நடைபெறக் கூடிய செயலாஸ்னறு கருதலாம். இக்காலத்தில் நடைபெறும் பல்வேறு வகைத்தில்லுமுல்லுகளை நினைத்துப் பார்த்தால் இது ஒரு சிறிய விஷயம் என்பது தோன்றும்.
பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/151
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/page151-750px-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf.jpg)