பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 பணியாளர் தேர்வு ஒருவனிடம் அறியாமையை மட்டும் காண நேரிட்டு, அறிவுப் பகுதியைக் காணாமல், அவனுக்கு ஒன்றும் தெரியாது என்று ஒதுக்க நேரும். வெறுப்பின்றி அன்பு வளர்ந்த இடமாக இருப்பின், அவனுடைய அறிவுப் பகுதியை மட்டிலும் கண்டு அறியாமையைக் காணாமல் ஆராய்ச்சியில் குறையுற வேண்டி வரும். பிறகு அவனையே தேர்ந்தெடுத்தால், அதனால் தலைவனுக்கே அறியாமை வந்து சேரும் தலைவன் தன் பொறுப்பும் கடமையும் உணராத அறியாமையுடையவன் எனக் கொள்ள நேரும் 507 ஒருவனை நல்லவனா? கெட்டவனா? என்றும் ஆராய்ந்து காண்டலும் வேண்டற்பாலது. ஆனால் அவ்வாறு காணும்போது, முழுதும் நல்ல குணமே இருக்க வேண்டும் என்றும், சிறதும் குற்றம் இருத்தல் ஆகாது என்றும் ஆராய்வதால் பயன் இல்லை. ஏன்எனில், உலகில் குணமே நிறைந்து குற்றம் சிறிதும் இல்லாதவர்களையும் காண முடியாது. குற்றமே வடிவாய்க் குணம் சிறிதும் இல்லாத வர்களையும் காண முடியாது. குணமும் குற்றமும் எல்லோரிடமும் கலந்தே உள்ளன. ஆகையால் இரண்டை யும் சீர் தூக்கி ஆராய்ந்து குணம் மிக்கிருந்தால் அவரைக் கொள்ள வேண்டும். குற்றம் மிக்கிருந்தால் அவரைத் தள்ள வேண்டும். தவிர்த்தல் வேண்டும். கொள்ள வேண்டும் ஒவ்வொரு வரிடமும் குணம் குற்றம் இரண்டும் கலந்தே இருக்கும். ரோசாமலரில் முள் இருப்பதுபோல், ஆகையால் குணம் நாடும்போதே குற்றமும் உடன் ஆராய வேண்டும். 4. பாரதத்தில் தருமனிடம் குற்றமும் சிறிது இருந்தது; துரியோதனனிடம் குணமும் சிறிது இருந்தது. இவற்றை நினைவு கூர்க,