பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 124 வேறு ஒரு வழியும் உண்டு. பேச்சிலும் உண்மை காணாத நிலையில் அவர் புரியும் செயல்களில் உண்மை பளிச்சிடும். ஆகையால் அவருடைய இயல்பு இன்னது என்று ஆராய்வதைவிட்டு. அவர் செய்த செயல்களை எண்ண வேண்டும். ஆராய் வேண்டும். அந்தச் செயல்களால் அவருடைய பண்பு விளங்குவது உறுதி. ஏன் என்றால் ஒருவரது பெருமையையோ சிறுமையையோ அவர் செய்யும் செயல்களே பொன் உரைக்கும் கட்டளைக் கல் போல் மதிப்பிட்டுக் காட்ட முடியும். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (505) என்பது இருப்பூர்திகள் செல்லும் முைைறகளை எடுத்துக் காட்டி விளக்குவது போன்ற வள்ளுவர் வாய்மொழி.