பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. நாகரிக ஏணி உயிர்களின் படைப்பு ஏணியில் உச்ச எல்லையில் இருப்பவன் மனிதன். அவன் அறவாழ்வு வாழ்ந்து மேலும் படிஏணியில் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் வள்ளுவர் பெருமானின் சிந்தையில் சிந்தனையில் எழுந்தது திருக்குறள் என்னும் தெய்வப் பனுவல். அந்தப் பனுவல் பகரும் நாகரிகத்தை அளந்தறியும் கருவி கண்ணோட்டம். அந்தக் கண்ணோட்டத்து உள்ளது உலகியல் (573) கண்ணோட்டம் என்பது என்ன? அது பழகிய வரிடத்தில் நெகிழ்ந்து நடக்கும் பண்பாகும். இப்பண்பு மக்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது. அன்றியும் மிகச் சிறந்த அழகாகவும் திகழ்வது. இப்பண்பு மனிதனிடம் இருப்பதால்தான் உலகியல் சிறப்பாக நடைபெறுகின்றது. இங்ங்னம் பழகியவரிடத்தில் நெகிழ்ந்து ஒழுகும் பண்பு இல்லையாயின் ஒருவரை ஒருவர் சீறுவதும் வெறுப்பதுமே வாழ்க்கையாக அமைந்து விடும். புலியும் மற்றக் கொடிய விலங்குகளும் வாழும் காடு போலவே நாடும் மாறித் தோன்றிய நிலை ஏற்பட்டு விடும். ஆகையால் உலகத்தில் சமுதாய அமைப்பிற்கே கண்ணோட்டம் அடிப்படையாக இருப்பது புலனாகின்றது. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையால் உண்டுஇவ் வுலகு (571) 1.கண்ணோட்டம் -1 (58 வது அதிகாரம்)