பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 நாகரிக ஏணி பெயர்களைச் சொல்லி வெறியூட்டுகின்ற உணர்ச்சியாளர் களுக்கும் தந்திரக்காரர்கட்கும் இரையாகாமல் விழித்துக் கொள்வார்கள். ஆகவே எப்படியும் மக்கள் பண்பை அழிக்க முடியாது. மக்கள் வாழ்க்கை இந்த அடிப்படை கொண்டே அமைந்துள்ளது. புலி முதலிய கொடிய விலங்குகளின் வாழ்க்கை இப்படி அமையவில்லை. ஒன்றை ஒன்று காணும்போது உறுமுகின்றது. வலிய விலங்குகளைக் கண்டால் ஓடி ஒளிகின்றது. வலிமை குன்றிய விலங்குகளைக் கண்டால் துரத்தி அவற்றைக் கொல்லுகின்றது. இஃது இவ்விலங்கு களின் இயல்பு. அவ்வளவு ஏன்? தம் வயிற்றில் பிறந்த குட்டிகளையும் அவை வளர்ந்த பிறகு அவற்றைக் கண்டு உறுமுகின்றன. பகைக்கின்றன. இதனால் இக்கொடிய விலங்குகளிடம் பத்துப் பதினைந்தாகவோ நூறு இருநூறாகவோ குழுக்களாகக் கூடி வாழும் தன்மை அமையவில்லை. அவை தம் இனத்தையும் போற்றுவ தில்லை; பிற இனத்தையும் அழிக்காமல் விடுவ தில்லை. இதன் பயனாக இக் கொடிய விலங்குகள் வளர்ந்து பெருகாமல், விருத்தியடையாமல், வரவரக் குன்றியும் குறைந் தும் வருகின்றன. இறைச்சியுண்ணும் இக் கொடிய விலங்கு களின் பண்பு இவ்வாறு அமையக் காண்கின்றோம். ஆனால் புல் தழைகள் முதலியவற்றை உண்ணும் மான் முயல் முதலிய மற்ற தீமையற்ற உயிர்கள் எவ்வளவோ அழிவுகட்கும் இடையிலும் பெருகி வாழ்ந்து வருவதைக் காண்கின்றோம். இவை இருபது முப்பதாககக் கூடி வாழ் கின்றன; கவலையற்றுக் காற்றிலும் ஒளியிலும் கலந்து விளையாடி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றன. இவை புலி சிங்கங்களைப்போல் குகைகளிலும் கற்பாறைகளின் இடுக்கு