பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 128 களிலும் ஒதுங்கிப் பதுங்கி பகலில் தலைகாட்ட அஞ்சி அடைபட்டுக் கிடப்பதில்லை; வெட்டவெளியில் வாழ்ந்து மகிழகின்றன. மக்கள் வாழ்க்கையும் இப்படித்தான். இவர்களது உடல் அமைப்பையும். செரிமானக் கருவிகளின் அமைப்பையும் நோக்குமிடத்து மக்கள் இயல்பாகவே மரக்கறி உண்பவர்கள் எப்படியோ சிலர் இறைச்சி யுண்பவர்களாக மாறி வெறியுடன் அதனை உண்டு மகிழ்கின்றனர். வள்ளுவர் பெருமானின் கொல்லாமை, புலால் மறுத்தல் அறிவுரைகளும், வள்ளல் பெருமானின் சீவகாருணிய ஒழுக்க அறிவுரைகளும் இவர்கள் போக்கை மாற்ற முடியவில்லை’ மக்கள் பிறரோடு பழகிக் கண்ணோட்டம் உடையவர் களாய் இயைந்து வாழ்வதையே பண்பாகக் கொண்டிலங் குகின்றனர். அதனால்தான் நூறாயிரக் கணக்காகக் கூடிவாழ் வதும், பெரிய பெரிய சமுதாயம் அமைத்து வாழ்வதும் குடியரசு அமைத்துக் கொண்டு வாழ்வதும் இயல்வனவாக உள்ளன. தந்திரமும் தாந்திரமும் உடைய சிலர் சூழும் கேடுகளுக்குச் சில சமயம் இரையாகிப் போர் முதலியவற்றால் மக்கள் அழிவுற்றாலும், அந்தக் கண்ணோட்டப் பண்பு அழிவு படவில்லை. சமுதாய அமைப்பும் குலையவில்லை. இவ்வளவு சிறந்த மக்கட் பண்பை வள்ளுவர் பெருமான் கழிபெருங் காரிகை மிகச் சிறந்த அழகு எனப் போற்றுகின்றார். மேலும் அப்பெருமான் கூறுவன கண்ணோட்டம் இருப்பதால்தான் உலகியல் அழியாமல் உள்ளது என்றும், அப்பண்பு இல்லாதவர் பூமிக்குச் சுமையேயன்றி வேறு பயன் திெஇகிெருவிகளைக் உண்ணும் வாய் முதல் எருவாய் ஈறாகக் கூர்ந்து நோக்கினால் மனிதன் மரக்கறி உணவுக்குரியவன் என்பது தெளிவாகும்.