பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. பேச்சாற்றல் நாம் வாழும் காலம் மக்களாட்சி நிலவி வரும் காலம். தேர்தல் மூலம் அரசியலில் புக விழைவார்க்கு இன்றியமையாத திறன் பேச்சாற்றல். வள்ளுவர் பெருமான் இதனை அமைச்சியலில் விளக்குவதால் இதன் இன்றி யாமை மேலும் தெளிவாகும்; உறுதியும் ஏற்படும். நல்ல தேர்ந்தெடுத்த சொற்களால் நன்மை உண்டாகும் தீய சொற்களால் தீமை ஏற்படும். ஆக்கமும் கேடும் சொற்களால் வருவனவாக உள்ளமையால் பேசும் போது சொற்களை ஆளுவதில் விழிப்பாக இருத்தல் வேண்டும்; சேர்ந்திருந்து கேட்டிற்கு இடம் தரல் ஆகாது. ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு(842) என்பது வள்ளுவம், சொல்வன்மையை நாநலம் என்று போற்றியுரைப்பர் 1641). தமிழகத்து அரசியல் வானில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சாற்றலால் ஒரு துருவமீன் போல் திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா, தமிழில் அடுக்கு மொழிப் பேச்சைத் தொடங்கி வைத்தவர் அண்ணா. முதன் முதலாக மக்கள் மன்றத்தில் பேசிய பேச்சைத் தொகுத்து வெளியிட்ட பெருமையுடையவர் பண்ணுருட்டி இராமச்சந்திரன் அந்நூலைச் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத்