பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 134 தமிழ் மாநாட்டில் இலவசமாக வழங்கிப் பெரும் புகழ் பெற்றவர் எம்.ஜி. ஆர். அவர்கள். ஒருவர் பேசும்போது கேட்பவர்களைப் பிணித்துக் கவரக் கூடிய தன்மையை நாடவேண்டும் கேளாதவர்களும் கேட்கவேண்டும் என விரும்பக்கூடியதாக அமைய வேண்டும். அதுதான் சிறந்த நாநலம் மிக்க சொல் வன்மையாகும். கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் (643) என்பது புத்தொளிகாட்டும் வள்ளுவம். இத்தகைய பேச்சுக்கு அறிஞர் அண்ணாவே ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்கின்றார். சமயச் சொற்பொழிவாளர்களின் திலக மாகத் திகழ்பவர் தவத்திருவாரியார் சுவாமிகள். இந்த நூற்றாண்டில் சமயக் கருத்துகளைத் தம் பேச்சாற்றலால் மக்கள் மனத்தில் விதைத்து அவர்களிடையே மனத்துய்மையையும் ஏற்படுத் தியவர் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் வைணவ சமயக் கருத்துகளை மக்கள் மனத்தில் விதைக்கவும் பெரும்பங்குகொண்டவர்கள். தந்தை பெரியாரின் பேச்சாற்றல் சொல்லுந்தர மன்று. அவர் மக்கள் மனத்தில் பகுத்தறிவுக் கருத்துகளைத் தூவி அவர்களிடையே சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தவர். 1. நான் துறையூர் உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியலாகப் பணிலாந்திய காலத்தில் (1941-1950) 1948 வாக்கில் ஆற்றோரம் என்ற புகழ்மிக்க மொழிவை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திகழ்த்தியபின் அண்ணா ஒருவாரத்தில் துறையூர் திரும்பிய போது பள்ளியில் அதே சொற்பொழிவை நிகழ்த்தச் செய்து கடல் போல் திரண்டு வந்த துறையூர் பெருமக்களுக்கு அறிமுகம் செய்தமையை இப்போது