பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蛍35 பேச்சாற்றல் இத்தகைய சொல்வன்மை உடையராய், சோர்வு இல்லாதவராய், அவையோர்க்கு அஞ்சதவராய் இருந்தால் அவரோடு மாறுபாடு கொண்டு வெல்ல எவராலும் முடியாது சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது (E47) என்பது இப்பண்புடையவரைக் காட்டும் பொய்யா மொழி' சொல்லினை ஒழுங்கு படக் கோத்து இனிமையாகச் சொல்லவல்லவர்கள் வாய்த்தால், உலகம் அவர்கள் ஏவும் தொழிலை விரைந்து கேட்டு நடக்கும். இக்கருத்தை விளக்கும் வளளுவம, விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் திரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648) என்பது.மணிக்கணக்காகப் பலவகை ஆற்றல் தோன்ற விரிவாகப் பேசுவதே பேச்சுத் திறமை என்று நினைக்கின்றனர். அது தவறு. உலகத்தில் மிகப்பெரிய செயல்களைச் செய்தவர்கள் எல்லோரும் பெரும் பேச்சாளர்கள் அல்லர்: பெரும் பேச்சுவேறு சொல் வன்மை வேறு பயனற்ற பெரும் பேச்சு வீண் முயற்சியே தவிர நன்மை சிறிதும் விளைக்காது. ஆகையால் குற்றமற்ற சில சொற்களைச்சொல்லிப் பயன்பெறும் வழியைத் தெளிய வேண்டும். இந்தத் தெளிவு இல்லாதவர்களே பல சொற்களைச் சொல்ல விரும்புவார்கள். பலசொல்லிக் காமுறுவர் மன்ற மாசற்ற சிலசொல்லல் தேற்ற தவர் (648) என்பது இக்கருத்துக்கு ஒளி காட்டும் வள்ளுவம் கல்வி என்பது கற்றவர் மட்டும் பயன் பெறுவதற்காக 2. சொல்வன்மை (அதி.85) - 7 வ. வா. சி - :