பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X智 என்னும் சொல் உருவாகிறது. வாழை பல்லாற்றானும் பலருக்கும் பயன்பட்டு, தன் மரபு அழியாமல் தொடர குலையைத் தள்ளி, கடமை நிறைவேறிய பின்பு வீழ்கிறது. மனிதன் மாய்ந்த பின்பும் உடலுறுப்புகள் பயன்படுத்தப் படுவதைப் போல் வீழ்ந்த வாழையும் பயன்படுகிறது. வாழையின் பயன்பாட்டுச் சிறப்பினையும் வாழ்வியலுடன் இம்மரம் எங்ஙனம் ஒப்பிடப்படுகிறது என்றும், வாழை வழங்கும் படிப்பினையும் திருக்குறள் மூலம் பேராசிரியர் வழங்கும் தெளிவான, விரிவான விளக்கம் வரவேற்கத் தக்கது. அறத்துப்பாலில் 'இறைவழிபடுதல் முதல் பதிகமாகவும் ஊழ் இறுதி 38 ஆவது பதிகமாகவும் அமைகிறது. இறைமை, ஊழ்வினை ஆகிய இரண்டும் தனித்தன்மையும், வலிமையும் மிக்கது. ஆக்கமும் அழிவும், பீடும் கேடும், பிறப்பும் இறப்பும், வளமும் வறுமையும் வாழ்வும் தாழ்வும், வெற்றியும் தோல்வியும், ஊழின் ஆதிக்கத்தால் விளையும். அறிவு, அடக்கம் அமைதி, அவாவின்மை, இனிமை, ஈகை, உழைப்பு, ஊக்கம் எதிர்பார்ப்பு, ஏக்கம், ஒழுக்கம், பொறுமை, முயற்சி முதலிய அகவாழ்வின் கூறுகளில் ஊழின் ஊடுறுவல் இல்லை. மனவலிமையுடன் உள்ளம் உறுதியுடன் ஆர்வம் குன்றாமல் எழுச்சியுடன் முயன்று, வென்று, என்றும் ஏற்றத்தை எய்த இயலும்!. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் (611) ஒரு செயலை நிறைவேற்ற இயலாது என எண்ணும் எதிர்பார்ப்புக்கு மாறாக, மனச்சோர்வின்மை வேண்டும்.