பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் துணிந்தவர் உலகில் பலர் உளர். ஆனால் அறஞர்கள் கூட்டத்தில் அஞ்சாமல் ஒன்றைச் சொல்ல வல்லவர் சிலரே பாகும். பகையகத்துச் சாவார் எளியர், அரியர் அவையக அஞ்சாத வர் (723) என்பது வள்ளுவர் வாக்கு தந்தை பெரியாரிடம் இத்தகைய பண்பைக் கண்டு அறிஞர்கள் பலர் போற்றிப் புகழ்ந்தவர் களுள் ரா.கி. என்று வழங்கும் கல்கி நம் நினைவுக்கு வருகின்றார். கல்கியவர்களும் எவர்க்கும் அஞ்சாதவர். இங்ங்ணம் அஞ்சாமல் பேசி மறுமொழி சொல்லும் வல்லமை பெறுவதற்காகக் கற்க வேண்டிய முறைப்படி கற்கவேண்டிய அளவு அறிந்து நூல்களைக் கற்க வேண்டும். அவ்வாறு நூல்களைக் கற்ற பின்னரும் நுண்ணிய அறிவுடையவர்களின் கூட்டத்தில் பேச அஞ்சினால் அந்தக் கல்வியால் பயன் இல்லை (25.அஞ்சாமை இல்லாதவர் கட்கு வாளோடு தொடர்பு இல்லாதது போல், இவர்கட்கும் நூலோடு தொடர்பு இல்லை 726. பகைவர்களின் எதிரே போர்க்களத்தில் நிற்கும் டேடியின் கையில் அகப்பட்ட கூரிய வாளும் அவைக் களத்தில் அஞ்சுகின்றவர் கற்ற நூலும் ஒன்று தான் 727. இத்தகை யவர்கள் கல்லாதவர்களை விடத் தாழ்ந்தவர்களே ឆ្អ 29 فیفا