பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 篮亭2 குணம்தெரியா தழிமதியே கொண்டாடிக் குருட்டாட்டம் கொள்ளு கின்றார் பிணந்தெரியப் பெருநாளில் பெறுவதனை நினையாமல் பிழைக்கின் றாரே' ~ 3. - * #--. سهبی * ન્ય w என்பது கவிராஜப் பண்டிதர் செகவீரபாண்டியனாரின் பாடல்.

ன்றாட வாழ்வில் ஏழையர் முதல் மேல் மட்டம் வரை யிலுள்ளோர் பலர் பணத்திற்காக பறந்தோடி அலைவதைப் பாடல் சித்திரிக்கின்றது.

பணம் சம்பாதிப்பதைப்பற்றி வள்ளுவர்பெருமான் பொருள் செயல்வகை பொருட்டால் அதிகாரம் - 76) என்ற அதிகாரத்தில் விளக்குகின்றார். பணக்காரன் பக்கம் பத்து பேர் டைத்தியக்காரன் பக்கம் பத்து பேர் என்பது ஒரு பழமொழி. இன்றைய உலகில் ஒரு பணக்காரன் பக்கம் எந்தவிதக் காரணமும் இன்றி சிலர் சுற்றிக் கொண்டு அப்பணக்காரர் செல்லும் இடந்தோறும் அவருடன் கூடவே திரிவதைக் காணலாம். இதனால் அப்பணக்காரருக்குள்ள மதிப்பும் தமக்குண்டு என்ற பொய்யான மயக்கம் இவ்வாறு செய்யத் துண்டுகின்றது என்று கருதலாம். எந்த விதமான நற்குணங்களும் ஓர் 'அம்மன் காசு’ அளவு கூட மதிப்பில்லாதவரிடம் பணம் சேர்ந்து விட்டால் அவர்களையும் சமூகத்தில் மதிக்கத் தக்கவர்களாகச் செய்யும் சிறப்புடையது அவர்களிடமிருக்கும் பணம். ஆகையால் লিটলমল্লত্রেটাক্রেম"।. 2. அம்மன்காசு. புதுக்கோட்டை அரசுக்காலத்தில் ஒருதம்பிடி(1 ரூபாய்க்கு 19:தம்பிடி)க்கு3காக வீதம் வழக்கிலிருந்த காசு. அதன் மீது 'அம்மன் என்ற தேவதையின் உருவம் பொறிக்கப்பெற்றிருந்தமையால் 'அம்மன்காசு என்ற பெயரால் வழங்கி வந்தது. ੁ